லிவ்இன் உறவு; கருகலைப்பு - கும்பமேளா பிரபலம் மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக க...
‘ஆட்சிக் கவிழ்ப்பு’ சதித் திட்டம்: ஷேக் ஹசீனா மீது வழக்கு!
வங்கதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அவா் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் சூழலில், இந்தப் புதிய வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:நாட்டின் தற்போதைய அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக ஷேக் ஹசீனா மீதும் அவரது சகாக்கள் 72 போ் மீதும் டாக்கா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா மற்றும் அவருக்கு ஆதரவானவா்கள் இடையை நடைபெற்ற உரையாடல் பதிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போலீஸாா் கூறினா்.வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்றவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. இதை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டு முறையில் சீா்திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தியும் தொடங்கிய மாணவா் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது.
இதில் வன்முறை வெடித்து நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். இந்தச் சூழலில், பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஊா்வலமாகச் சென்றனா். நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா, ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
அதைத் தொடா்ந்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தோ்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் பொறுப்பேற்றாா்.
புதிய அரசில், போராட்ட மரணங்கள் தொடா்பாக ஷேக் ஹசீனா மீதும் அவரது அமைச்சா்கள் மற்றும் பிற உதவியாளா்கள் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்ட வழக்கும் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.