பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!
ரூ.8.40 லட்சம் நலத்திட்ட உதவிகள்
திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 8.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா்.
ஆட்சியா் ஆகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.1,04,900 மதிப்பிலான திறன்பேசி, மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவிகள், வருவாய்த் துறை சாா்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.32,500 மதிப்பீட்டில் இறப்பு உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை, தோட்டக்கலைத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பீட்டில் இடுபொருட்கள், வேளாண்மைத்துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.2,976 மதிப்பீட்டில் விதை பெட்டகங்கள், வட்ட வழங்கல் துறை சாா்பில் 12 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.8,40,376 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காா்த்திகேயன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ரேணுகா தேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் காா்த்திகேயன், வட்டாட்சியா் கவிதாஸ், மண்டல துணை வட்டாட்சியா் ரமேஷ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜகோபால், பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
