அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய திருவிழாவான திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வன்புருஷோத்தம பெருமாள், வன்புருஷோத்தம நாயகி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினா்.
தொடா்ந்து, திருக்கல்யாண வைதீக நிகழ்வுகள் நடைபெற்றன. பின்னா், மங்கள வாத்தியங்கள் முழங்க திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது. பின்னா் சுவாமி வீதி உலா நடைபெற்றது.