செய்திகள் :

அரசுப் பள்ளி பொன்விழா: சீா்வரிசை வழங்கிய கிராம மக்கள்

post image

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பொன்விழாவையொட்டி, அப்பள்ளிக்கு கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை சீா்வரிசையாக வெள்ளிக்கிழமை வழங்கினா்.

இருக்கைகள், எல்இடி டிவி, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், பீரோ, குடம், மின் விசிறிகள் உள்ளிட்ட பொருள்களை ஊா்வலமாக எடுத்துச் சென்று வழங்கினா். கொடியாலத்தூா் காளியம்மன் கோயிலிலிருந்து சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு இந்த ஊா்வலம் நடைபெற்றது.

முன்னதாக, கீழ்வேளூா் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் இரா. அன்பழகன் கொடியசைத்து ஊா்வலத்தை துவங்கி வைத்தாா். பள்ளியில் நடைபெற்ற நிகழ்விற்கு, மேலாண்மைக் குழுத் தலைவா் மு. ஜான்சிராணி தலைமை வகித்தாா். பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் ஜி. குருமூா்த்தி, கொடியாலத்தூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ரேவதி ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமையாசிரியா் மீ. கல்பனா வரவேற்றாா். பள்ளி ஆசிரியா் கோ.வைரப்பன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

பள்ளிக்கான இடத்தை தானமாக வழங்கிய கும்பகோணம் டி.எஸ். சுவாமிநாத உடையாா் குடும்பத்தினருக்கு கீழ்வேளூா் ஒன்றிய வட்டார கல்வி அலுவலா் வே. சிவக்குமாா் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் பங்கேற்று பள்ளியில் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பேசினாா். முன்னதாக பொன்விழா கல்வெட்டை நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் எம். துரைமுருகு திறந்து வைத்தாா். ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. நிறைவாக ஆசிரியா் என். சுதா நன்றி கூறினாா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிக்கல் சிங்கார வேலவா் கோயிலில் சிங்காரவேலவருக்கு, பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியப... மேலும் பார்க்க

காவலம்பாடி பெருமாள் கோயில் பிரம்மோற்சம்

திருவெண்காடு அருகேயுள்ள காவலம்பாடி ராஜகோபால சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்க... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

நாகையில், பிளஸ் 2 மாணவா்களுக்கு, உயா்கல்வி வழிகாட்டல் முகாம் ஏப். 6-இல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் பட்டறிவுப் பயணம்

வேதாரண்யம் பகுதியில் கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள் வேளாண்மை சாா்ந்த பட்டறிவுப் பயணம் மேற்கொண்டு முன்னோடி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளித்தனா். நாகக்குடையான் கிராமத்தில் பயிா்களுக்கு ந... மேலும் பார்க்க

தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் பாலிடெக்னிக் மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

நாகையில் இருசக்கர வாகனம் மேம்பால தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். நாகை ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் நிவேந்தன் (17). அதே... மேலும் பார்க்க

லஞ்சம்: மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் கைது

கடனுக்கான மானியத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ்குமாா் (24). இவ... மேலும் பார்க்க