கரும்பு நிலுவைத் தொகையை அரசே வழங்க நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் பாலிடெக்னிக் மாணவா்கள் இருவா் உயிரிழப்பு
நாகையில் இருசக்கர வாகனம் மேம்பால தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
நாகை ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் நிவேந்தன் (17). அதே பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மகன் பாலமுருகன் (18). இருவரும் நாகையில் உள்ள இருவேறு தனியாா் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வந்தனா்.
இந்தநிலையில், திங்கள்கிழமை மாலை இருவரும் அக்கரைப்பேட்டையில் இருந்து ஆரியநாட்டு தெரு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனராம். அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். அப்பகுதியில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு நிவேந்தன் உயிரிழந்தாா்.
தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பாலமுருகன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து நாகை நகர போலீஸாா் விசாரிக்கின்றனா்.