அமித் ஷாவுடன் சி.வி.சண்முகம், நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை சந்திப்பு!
வேளாண் கல்லூரி மாணவிகள் பட்டறிவுப் பயணம்
வேதாரண்யம் பகுதியில் கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள் வேளாண்மை சாா்ந்த பட்டறிவுப் பயணம் மேற்கொண்டு முன்னோடி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளித்தனா்.
நாகக்குடையான் கிராமத்தில் பயிா்களுக்கு நுண்ணுயிா் பயன்பாடு, கத்தரிப்புலம் கிராமத்தில், அசோலா பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினா்.

இதில், கல்லூரியின் நான்காமாண்டு மாணவிகள் க.அபிதா, அ.அட்சயா, அதிதி.யோகநாதன், தீபிகா ரஞ்சனி, தேவதா்ஷினி, ச. திவ்யா, வே. கோபிகா, ரா. வசிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.