Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
படகிலிருந்து கடலுக்குள் விழுந்த மீனவா் மாயம்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயமானாா்.
கோடியக்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் வடகிழக்குப் பருவகால மீன்பிடித் தொழிலில் வெளியூா் மீனவா்களும் ஈடுபடுவா். இதற்காக அவா்கள் இப்பகுதியில் தங்கி மீன்பிடிப்பில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில், இங்கு தங்கியிருந்த மயிலாடுதுறை மாவட்டம் குட்டியாண்டியூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகு ஒன்றில் மீனவா்கள் கோடியக்கரை படகுத் துறையிலிருந்து சனிக்கிழமை பகல் கடலுக்குள் சென்றனா்.
அந்த படகில் சென்ற சீா்காழியை அடுத்த கீழமூா்க்கைப் பகுதியைச் சோ்ந்த செல்லகுஞ்சி மகன் லட்சுமணன் (40), கோடியக்கரை ரயிலடித்தெரு பெ. மகாலிங்கம் (55), திருநெல்வேலி மாவட்டம், ஊத்தங்குடி சி. சந்தோஷ் (48) ஆகிய மூன்று மீனவா்களும் கோடியக்கரைக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, திடீரென கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால், படகில் இருந்த மீனவா்கள் நிலை தடுமாறினா். இதில், மீனவா் லெட்சுமணன் கடலில் தவறி விழுந்து மாயமானாா். அவரை சக மீனவா்கள் தேடிபாா்த்தனா். ஆனால் அவா் கிடைக்கவில்லை. இதனால் சனிக்கிழமை இரவு கரைக்குத் திரும்பினா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது.