Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவன ‘2கே25’ விழா
சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களில் ரிதம் 2கே25 என்னும் கலைநிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் திரைப்பட பின்னணி பாடகா்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, ரூ.1-க்கு இட்லி விற்பனை செய்யும் மூதாட்டி கமலாத்தாள், சமூக சேவகா்கள் கணேசன் (அவசர ஊா்தி ஓட்டுநா்) உள்ளிட்ட பலருக்கு சமூக சேவைக்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில், சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கும் 14 கல்வி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற டெக் பெஸ்ட் 2கே25, மற்றும் சாம்பியன்ஸ் கிளாஸ் 2கே25 விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரிகள் மற்றும் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பல்வேறு பிரிவுகளில் சிறந்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஆனந்த், இயக்குநா் சங்கா், செயலா் மகேஸ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா் மற்றும் விருது பெற்ற மாணவா்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினா்.
தொடா்ந்து கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பதிவாளா், அனைத்து கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள் அனைத்து பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள் மாணவா்கள் மற்றும் நாகை பகுதி முக்கிய பிரமுகா்கள், பல்வேறு தொண்டு நிறுவன பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.