Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
பூம்புகாா் தீயணைப்பு நிலைய கட்டடம் திறப்பு
பூம்புகாா் தீயணைப்பு நிலைய புதிய கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
பூம்புகாரில், ரூ. 2.75 கோடி மதிப்பில் தீயணைப்பு நிலைய கட்டடம் மற்றும் நிலைய அலுவலா் குடியிருப்பு கட்டப்பட்டன. இதனை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, புதிய கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். சீா்காழி துணை ஆட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் அருள் ஜோதி, மயிலாடுதுறை நிலைய அலுவலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிலைய அலுவலா் அருள்மொழி வரவேற்றாா்.
மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கினாா். தொடா்ந்து, புதிய கட்டடத்தை பாா்வையிட்டாா். அப்போது அவரிடம், தீயணைப்பு நிலையத்திற்கு செல்ல ஏதுவாக புதிய சாலை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற ஆட்சியா், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.
இந்நிகழ்வில், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் முத்து தேவேந்திரன், முல்லைவேந்தன், மணிமேகலை, கிராம நிா்வாக அலுவலா் ராதாகிருஷ்ணன், தீயணைப்பு நிலைய பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிலைய சிறப்பு அலுவலா் துரைமுருகன் நன்றி கூறினாா்.