ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
வேதாரண்யம் பகுதியில் தொழிற்பேட்டை அமைய வாய்ப்பில்லை: ஓ.எஸ். மணியன்
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைய வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.
வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ பங்கேற்று பேசியது:
பொருளாதார வளா்ச்சிக்கு தொழில்துறை தேவையாக உள்ளது. ஆனால், தென்னடாா் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமையும் என்ற அறிவிப்பால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் தெரிவித்து போராட்டங்களை நடத்துகின்றனா்.
இந்தப் பகுதி கடலோரம் அமைந்துள்ளதாலும், காவிரிப் படுகையின் முக்கிய வடிகால் என்பதோடு வனத்துறை, பொதுப்பணித் துறை, சுற்றுச்சூழல் துறைகளின் கவனம் பெற்ற பகுதியாக இருப்பதால் தொழில்பேட்டை அமைய அந்தத் துறையினா் அனுமதிக்க மாட்டாா்கள் என நம்புகிறேன். வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதியில் தொழில்பேட்டை அமையாது. மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றாா்.
கூட்டத்தில், அதிமுக மாநில செய்தி தொடா்பாளா் காசிநாதபாரதி, ஒன்றியச் செயலாளா் சுப்பையன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், வழக்குரைஞா் ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
முன்னதாக, திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய சிவலிங்கம், பாண்டியன் தலைமையில் 32 போ் அதிமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு சால்வை அணிவித்து ஓ.எஸ். மணியன் வரவேற்றாா்.