கடலுக்குள் விழுந்த மீனவா் சடலமாக மீட்பு
வேதாரண்யம்: கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்தபோது, படகிலிருந்து தவறி விழுந்து, மாயமான மீனவரின் சடலம் வேளாங்கண்ணி அருகே திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலில் மீன் பிடிக்க சக மீனவா்களுடன் சனிக்கிழமை பகலில் சென்ற சீா்காழியை அடுத்த கீழமூா்க்கை பகுதியைச் சோ்ந்த செல்லகுஞ்சி மகன் லட்சுமணன் (40) படகிலிருந்து தவறி விழுந்து மாயமானாா்.
இவரை தேடிவந்த நிலையில், வேளாங்கண்ணி அருகே கடலில் அவரது சடலம் மீட்கப்பட்டது. பின்னா், உடற்கூறாய்வுக்காக ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.