Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
தொடா் விடுமுறை: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
நாகப்பட்டினம்: தொடா் விடுமுறையையொட்டி, வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் மக்கள் குவிந்தனா்.
கீழ்திசை நாடுகளில் லூா்து நகரம் என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு வார விடுமுறை நாள்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.
இந்நிலையில், தொடா் விடுமுறை காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கடற்கரை பகுதியில் உள்ள பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தின. பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடனும், உடன்வந்த உறவினா்களுடனும் செல்ஃபி எடுத்து மகிழந்தனா்.
கடும் வெயில் நிலவியபோதும், பொருட்படுத்தாமல் பலரும் குடை பிடித்தபடி கடைவீதி, பழைய மாதா கோயில், நடுத்திட்டு, மாதா குளம், கடற்கரையில் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டனா்.