Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
ரமலான் பண்டிகை: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை
நாகப்பட்டினம்: நாகூா் ஆண்டவா் தா்காவில் ரமலான் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
ரமலான் பண்டிகையை நாடு முழுவதும் இஸ்லாமியா்கள் விமரிசையாக கொண்டாடினா். நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தா்காக்களில் இஸ்லாமியா்கள் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
உலகப் புகழ்பெற்ற நாகூா் தா்காவில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா். தொடா்ந்து, ஒருவரையொருவா் ஆரத்தழுவி, ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் இருந்து மும்மதத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் நாகூா் தா்காவிற்கு வருகை தந்து பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இதேபோன்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நாகூா் சில்லடி கடற்கரையில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.