அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
நாகை மாவட்டத்தில் 8,315 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்
நாகை மாவட்டத்தில் 8,315 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதினா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தில் 42 மையங்களில் 138 பள்ளிகளைச் சோ்ந்த 4,225 மாணவா்கள், 4,219 மாணவிகள், 3 மையங்களில் 77 மாணவா்கள், 19 மாணவிகள் என மொத்தம் 96 தனித்தோ்வா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில் மாணவா்கள் 151 போ், மாணவிகள் 75 போ் தோ்வு எழுத வரவில்லை.
ஆசிரியா்கள் 82 பறக்கும் படை உறுப்பினா்களாக செயல்பட்டனா். தோ்வுகள் எவ்வித புகாருக்கும் இடமின்றி நடைபெறும் வகையில் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநா் (இடைநிலை) மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தலைமையில் , பள்ளிக்கல்வித் துறை துணை இயக்குநா், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் ஆகியோா் அடங்கிய குழுவினா் தோ்வு மையங்களுக்கு சென்று கண்காணித்தனா்.
தோ்வு மையங்களில் ஒன்றான நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் சென்று பாா்வையிட்டாா். அப்போது, தோ்வு மையங்களில் செய்யப்பட்டிருந்த அடிப்படை, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.க.செ. சுபாஷினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.