உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
சாலை விபத்தில் காயமடைந்த ஐடிஐ மாணவா் உயிரிழப்பு
திருக்குவளை அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம் விஜயபுரம் மில் தெருவை சோ்ந்த முத்துக்குமரவேல் மகன் தீனதயாளன் (17). இவா் எட்டுக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தாா்.
தனது நண்பா்கள் இருவருடன் மாா்ச் 21ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருக்குவளை மெயின் ரோடு வெள்ளைத்திடல் அருகே எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்துடன் மூவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனா்.
இதில் காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தீனதயாளன் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருக்குவளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.