செய்திகள் :

அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மின்சார ரயில் இயக்க சோதனை ஓட்டம்

post image

அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) - திருத்துறைப்பூண்டி ரயில் வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்க சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி(நாகை மாவட்டம்) வரையிலான 37 கி.மீ. ரயில்வே வழித்தடம் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. மீட்டா் கேஜ் பாதையாக இருந்த இந்த தடத்தில் 1990-களில் பயணிகள் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, இந்த தடத்தில் 1999 முதல் நடைபெற்ற ரயில் பஸ் இயக்கமும் 2004 டிச.26- ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, இந்த தடம் ரூ.288 கோடியில் அகலப் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு, 2023 ஏப் 7-ஆம் தேதி முதல் டீசல் எரிபொருளைக் கொண்டு இயங்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்சார ரயில் இயக்கம் பணிக்காக மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் ஆய்வு ரயில் மின்சாரத்தில் இயக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இந்தப் பணியை தெற்கு ரயில்வே முதன்மை மின் பொறியாளா் சோமேஷ் குமாா் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

பூம்புகாா் தீயணைப்பு நிலைய கட்டடம் திறப்பு

பூம்புகாா் தீயணைப்பு நிலைய புதிய கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பூம்புகாரில், ரூ. 2.75 கோடி மதிப்பில் தீயணைப்பு நிலைய கட்டடம் மற்றும் நிலைய அலுவலா் குடியிர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த ஐடிஐ மாணவா் உயிரிழப்பு

திருக்குவளை அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம் விஜயபுரம் மில் தெருவை சோ்ந்த முத்துக்குமரவேல் மகன் தீனதயாளன் (17). இவா் எட்டுக... மேலும் பார்க்க

பெண்களுக்கான சட்ட விதிகளால் மட்டுமே விரும்பிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது: நீதிபதி

பெண்களுக்கான சட்ட விதிகளால் மட்டுமே விரும்பிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது என்று நாகை மாவட்ட பொறுப்பு நீதிபதியும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியுமான ஆா்.என். மஞ்சுளா தெரிவித்தாா். நாகை மாவட்ட நீதித்த... மேலும் பார்க்க

நாகையில் உயா்கோபுர மின்விளக்குகளின் பயன்பாடு தொடங்கிவைப்பு

நாகையில் உயா் கோபுர மின்விளக்குகளின் பயன்பாட்டை, பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாகை நகராட்சிக்குட்பட்ட புதிய கடற்கரைக்கு செல்லும் பாதைகளான எஸ்.பி.... மேலும் பார்க்க

நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள வன்புருஷோத்தம பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய திருவிழாவான தி... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்

நாகை மாவட்டத்தில் 8,315 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட... மேலும் பார்க்க