செய்திகள் :

வீர தீர சூரன் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை!

post image

வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு திரையிட இருந்த முதல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியாக இருந்தது. சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான இது ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தைதான் முதலில் வெளியிடுகிறார்கள்.

வீர தீர சூரனுக்குத் தடை!

படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பி4யு என்ற நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக ஓடிடி உரிமத்தை பி4யு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால், ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 27 காலை 10.30 மணிவரை வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கை இன்று காலை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளனர். விசாரணையில் இருதரப்புக்கும் உடன்பாடு எட்டப்பட்டால், படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கும்.

இதனால், வெளிநாடுகளில் இன்று வெளியாகவிருந்த வீர தீர சூரன் திரைப்படத்தின் காட்சிகளும், தமிழகத்தில் காலை 9 மணி காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் அனுமதி வழங்கும் பட்சத்தில் பகல் 12 மணிக்கு திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க : வீர தீர சூரன் டிக்கெட் முன்பதிவு மந்தம்!

விக்ரம் - 63 படத்தின் பெயர் இதுவா?

நடிகர் விக்ரம் - இயக்குநர் மடோன் அஸ்வின் படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் பெரிய கவனம் ... மேலும் பார்க்க

தேசிய சாதனை படைத்த இந்திய வீரர்! 22 மில்லி செகன்டில் இழந்த உலக சாம்பியன்ஷிப் தகுதி!

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் உலக தடகள கான்டினென்டல் டூரில் பங்குபெற்ற இந்திய வீரர் குல்வீர் சிங் 10,000 மீ ஓட்டப் பந்தயத்தில் புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தடகள வ... மேலும் பார்க்க

தனுஷுக்கு வில்லனாகும் ஜெயராம்?

தனுஷின் புதிய படத்தில் நடிகர் ஜெயராம் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்ச... மேலும் பார்க்க

அதிக தொகைக்கு விற்கப்பட்ட இட்லி கடை ஓடிடி உரிமம்!

இட்லி கடை திரைப்படத்தின் ஓடிடி உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும்... மேலும் பார்க்க

தயாரிப்பில் கவனம் செலுத்தும் லைகா!

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா திரைப்பட தயாரிப்பிலில் கவனம் செலுத்த உள்ளதாகத் தகவல். தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸ் நடிகர் விஜய்யின் கத்தி திரைப்படத்தின் மூலம் சினிமா த... மேலும் பார்க்க

2-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்த மெஸ்ஸி..! ஜோகோவிச்சுக்கு சமர்ப்பணம்!

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் கால்பந்து தொடரில் இன்டர் மியாமி அணி 2-1 என வெற்றி பெற்றது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சேஷ் திடலில் இந்தப் போட்டி நடைபெற்றது. எம்எல்எஸ் கால்பந்து தொடரின் முதல் சு... மேலும் பார்க்க