செய்திகள் :

ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மக்களைச் சந்திக்கிறார் போப்!

post image

ரோம் : போப் பிரான்சிஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாளை(மார்ச் 23) மக்களைச் சந்திக்கவிருக்கிறார்.

கடைசியாக, கடந்த மாதம் 14-ஆம் தேதி போப் பிரான்சிஸ் பொதுவெளியில் மக்களைச் சந்தித்து உரையாடினார். அதன்பின், உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

போப் பிரான்சிஸ் இயற்கையாக சுவாசிக்க சிரமப்படுவது தொடருவதால், மூக்கின் வழியே குழாய் பொருத்தப்பட்டு அவருக்கு தேவையான ஆக்ஸிஜன் குழாய் மூலம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இரவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாகவும் வாடிகன் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இந்த நிலையில், இப்போதைய நிலவரப்படி, போப் பிரான்சிஸ் இரவில் வெண்டிலேட்டர் உதவியில்லாமல் மூச்சு விடுவதாகவும், நன்றாக தூங்கி ஓய்வெடுப்பதால் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெமெலி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ள அறையிலிருந்தபடி, ஜன்னல் வழியாக அவர் மக்களைச் சந்திப்பார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, போப் பிரான்சிஸ் உடல்நலம் பெற வேண்டி பல இடங்களிலும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மேற்கண்ட செய்தி உலகெங்கிலுமுள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போருக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம்!

இஸ்ரேல் - காஸா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் வலுத்து வருகிறது. லண்டன், ஸ்பெயின்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் அந்நாட்டுக் கொடிகள... மேலும் பார்க்க

அமெரிக்கா: நியூ மெக்சிகோ பூங்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அங்கிருந்தவர்கள் எடுத்த ... மேலும் பார்க்க

லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு! 6 பேர் பலி; 4 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்

லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாக்களின் நிலைகள் மீது இஸ்ரேல் தினமும் தொடர்ந்து வான்வழி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமையான இன்று (மார்ச் 23) மருத்துவமனையிலிருந்து திரும்புவார் (டிஸ்சார்ஜ்) என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்து... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளா்ச்சி: பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன்

‘இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளா்ந்துள்ளது’ என்று நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் சனிக்கிழமை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமராக கடந்... மேலும் பார்க்க

ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்

தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, லெபனானில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே க... மேலும் பார்க்க