செய்திகள் :

வீட்டில் நேர்ந்த வெடிவிபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

post image

ஹரியாணா மாநிலம் பஹதூர்காரில் உள்ள வீட்டில் நேர்ந்த வெடி விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் சந்தேகிக்கும் நிலையில், வெடி விபத்து படுக்கையறையில் நேர்ந்ததால் அதற்கான சாத்தியக்கூறு இல்லையென்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை துணை ஆணையர் மயங்க் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விபத்து சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து அல்ல, படுக்கையறையில் நடந்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீக்கறையாகியுள்ளது.

இதையும் படிக்க: நள்ளிரவில் பயங்கரம்... மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!

இவ்விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்; ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியான 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.” என்றார்.

வெடி விபத்துக்கான காரணத்தை அறிய, குண்டு வெடிப்பு பகுப்பாய்வு நிபுணர்களையும் தடவியல் ஆய்வகத்தின் குழுவையும் காவல் துறையினர் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக மயங்க் மிஸ்ரா தெரிவித்தார்.

ஏப். 14-ல் ஹரியாணா செல்கிறார் பிரதமர் மோடி!

புதிய விமான நிலையம் திறப்பதற்காக ஏப். 14ஆம் தேதி ஹரியாணா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை!

தீவிபத்தின்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.மாா... மேலும் பார்க்க

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

புது தில்லி: உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது நாடெங்கிலும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு: வெளியானது அறிவிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரு... மேலும் பார்க்க

'ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும்' - ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ் கைகளில் கல்வி முறை இருந்தால் இந்த நாடு அழிந்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். தில்லியில் புதிய கல்விக் கொள்கை, யுஜிசியின் புதிய விதிகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவ... மேலும் பார்க்க

கடந்த 5 ஆண்டுகளில் 120 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்: ஒடிசா முதல்வர்

ஊழலில் ஈடுபட்டதற்காகக் கடந்த 5 ஆண்டுகளில் 120 அரசு அதிகாரிகள் மற்றும் 39 அதிகாரிகள் கட்டாய ஓய்வு அளித்துள்ளதாக ஒடிசா அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ... மேலும் பார்க்க