வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்!
Dhoni: "ருத்துராஜைப் பெயருக்குத்தான் கேப்டனாக வைத்திருக்கிறோமா?" - விமர்சனங்களுக்குத் தோனி பதில்
ஐ.பி.எல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அதை ஒளிபரப்பும் JioStar நிறுவனத்துக்குத் தோனி பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அதில், ருத்துராஜூக்குப் பதில் தோனிதான் கேப்டன்சி செய்கிறார். ருத்துராஜ் பெயருக்குத்தான் கேப்டனாக இருக்கிறார் எனும் விமர்சனங்களுக்குத் தோனி பதில் கூறியிருக்கிறார்.

தோனி பேசியிருப்பதாவது, "2023-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் முடிந்தவுடனே ‘அடுத்த சீசன் நீங்கள் கேப்டனாக இருக்க 90 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு தயாராகிக்கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.
ருத்து எங்களுடன் சில வருடங்களாக இருக்கிறார். மேலும், நிதானமாகப் பதற்றப்படாமல் செயல்படக் கூடியவர்.
அதனால்தான், அவருக்கு கேப்டன்சி வாய்ப்பைக் கொடுத்தோம். எல்லாரும் கேப்டன்சி செய்துவிட முடியாது.
நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பைத்தான் கொடுத்துள்ளோம். அவர்தான் அவரை நிரூபித்துக் காட்ட வேண்டும்.
கடந்த சீசனில் ‘ருத்துராஜை வெறும் பேருக்குப் புதுக்கேப்டனாக அறிவித்துவிட்டு தோனிதான் களத்தில் கேப்டனாக செயல்படுகிறார்’ போன்ற விமர்சனங்களை நான் பார்த்தேன்.
ஆனால், எந்த பவுலரை உபயோகப்படுத்த வேண்டும், எப்படி ஃபீல்டிங் செட் செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவரேதான் முடிவெடுத்தார்.

நான் விக்கெட் கீப்பர் என்பதால், அந்த ஃபீல்டர் சற்று முன்னே இருக்க வேண்டுமா அல்லது தள்ளி நிற்க வேண்டுமா எந்த இடத்திலிருந்தால் சரியாக இருக்கும் எனச் சொல்லுவேன் அவ்வளவுதான்" எனக் கூறியிருக்கிறார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks