திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த விக்ரம், துஷாரா விஜயன்
வக்பு சட்டத்திருத்த மசோதா; சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவந்த ஸ்டாலின்
நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்பு சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு, 655 பக்க அறிக்கை தயாரித்தது.
இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைப்பெறும் தமிழக சட்டபேரவைக் கூட்டத்தொடரில் வக்பு சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய ஸ்டாலின், "ஒன்றிய பாஜக அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது.
இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை நிதிநெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது. அந்த வகையில் தற்போது வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலம் சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கிறது.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கிற, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான, வக்பு நோக்கத்திற்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத் திருத்தத்தில் உள்ளன. எனவே இதனை நாம் எதிர்க்க வேண்டும்" என்று கூறி தனித் தீர்மானத்தைத் தாக்கல் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs