செய்திகள் :

தேசிய விருது பெற்ற இயக்குநரின் படத்தில் நடிக்கும் ராம் சரண்!

post image

தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கடைசியாக நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில், தனது அடுத்தப் படத்தை கட்டாயமாக வெற்றிப் படமாக்கும் முனைப்பில் ராம் சரண் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறந்த தெலுங்கு திரைப்படமாக தேசிய விருது பெற்ற ‘உப்பெனா’ படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் புதிய படத்தில் ராம் சரண் நடிக்கிறார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

அதிக பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

பெட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. போஸ்டரில் ராம் சரண் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.

பெட்டி படத்தின் போஸ்டர் புஷ்பா படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம் அடுத்தாண்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க | வீர தீர சூரன் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை!

சர்தார் - 2 அறிமுக புரோமோ!

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 படத்தின் அறிமுக புரோமோவை வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது... மேலும் பார்க்க

பிரபாஸ் பட அப்டேட் பகிர்ந்த இயக்குநர் சந்தீப்!

பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட்டை மெக்சிகோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சந்தீப் வங்கா கூறியுள்ளார். அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவர் ... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியில் புதிய படம்!

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்க... மேலும் பார்க்க

கடுமையான விமர்சனங்களைப் பெறும் சிக்கந்தர்!

நடிகர் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் அகிரா படத்திற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்... மேலும் பார்க்க

வெளியானது குட் பேட் அக்லி இரண்டாவது பாடல்!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியான முதல் பாடலான ஓஜி சம்பவம் ரசிகர்களைக் கவர்ந்தது.இந்தப் பா... மேலும் பார்க்க

விக்ரம் - 63 படத்தின் பெயர் இதுவா?

நடிகர் விக்ரம் - இயக்குநர் மடோன் அஸ்வின் படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் பெரிய கவனம் ... மேலும் பார்க்க