கே.எல்.ராகுல் சேர்ப்பு: தில்லிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பேட்டிங் தேர்வு!
RCB: 'கோப்பையை இதுவரை வெல்லவில்லைதான், ஆனால்...' - கோலி குறித்து ஸ்டோய்னிஸ்
ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், விராட் கோலியைப் பாராட்டி பேசியிருக்கிறார்.
கோலி குறித்து பேசிய ஸ்டோய்னிஸ், " ஐபிஎலில் 17 வருடங்கள் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் கோலியின் அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது.

இதுவரைக்கும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்றாலும், 36 வயதான அவர் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். லீக்கின் சிறந்த வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.
நீண்ட காலமாக நாங்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம். இளம் வயதிலேயே இந்திய அணியில் நுழைந்து, அணியை வழிநடத்தி, இந்திய கிரிக்கெட்டின் முழு யுத்திகளையும் கற்றுக்கொன்டு தன்னம்பிக்கை உடன் செயல்பட்டு வருகிறார்.

இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்” என்று பாராட்டி பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...