செய்திகள் :

Dhoni : `இக்கட்டான நேரத்தில் களத்திற்கு வராத `பேட்ஸ்மேன்' தோனி!' - சென்னை அணிக்குத் தேவைதானா?

post image

'இக்கட்டான சூழலில் இறஙகாத தோனி!'

சேப்பாக்கத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றிருக்கிறது. தோல்வியை விட அவர்கள் தோற்றவிதம்தான் வேதனையானது. போராடும் குணமே இல்லாமல் மந்தமாக ஆடி வீழ்ந்திருக்கிறார்கள். அதிலும் தோனி செய்த காரியத்தை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது உள்ளே இறங்கி எதையாவது செய்வார் என ரசிகர்கள் நினைத்தார்கள்.

Dhoni
Dhoni

ஆனால், தோனி பெவிலியனிலிருந்து வேடிக்கை மட்டுமே பார்த்தார். தோல்வி உறுதியான பிறகு நம்பர் 9 இல் கூடியிருக்கும் கூட்டத்துக்கு ஆறுதல் காட்ட வந்தார். 'தோனி...தோனி...' என உயிரை விடும் ரசிகர்கள் சிலர் கூட தோனியின் இந்தச் செயலால் அப்செட் ஆகியிருக்கின்றனர்.

இக்கட்டான சூழலில் இறங்கி அணியைக் காப்பாற்றும் தோனியைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். வெளியே நின்று தோல்வியை வேடிக்கைப் பார்க்கும் தோனியை இப்போதுதான் பார்க்கிறோம். நம்பர் 9 இல் இறங்கும் இப்படியான தோனி சென்னை அணிக்கு தேவைதானா?

'நம்பர் 9 ஏன் பிரச்சனை?'

தோனி நம்பர் 9 இல் வருவதில் என்ன சிக்கல் என்பதைப் பார்ப்போம். தோனி நம்பர் 9 இல் வருகிறாரென்றால் அவரை ஒரு டெயில் எண்டராகத்தான் பார்க்க முடியுமே தவிர, ஒரு பேட்டராக பார்க்கவே முடியாது. ஏனெனில், அவர் க்ரீஸூக்குள் வரும்போதே போட்டி கையை மீறி சென்றுவிடுகிறதே. எனில், அணியில் தோனியின் ரோல்தான் என்ன? அவர் ஒரு கீப்பர் அவ்வளவுதான்.

Dhoni
Dhoni

இங்கேதான் பிரச்சனை. நவீன டி20 சூழலில் வெறுமென கீப்பிங்கிற்காக மட்டும் ஒரு வீரரை லெவனில் எடுக்க எந்த அணியும் தயாராக இல்லை. ஒரு கீப்பர் முழுமையான பேட்டராக இருக்க வேண்டும். தோனி அப்படி இல்லவே இல்லை.

'தோனியின் சமீபத்திய பாணி!'

அணி நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது தோனி சார்ந்த இந்த பிரச்சனை வெளியில் தெரியவே செய்யாது. ஏனெனில், அணி நன்றாக ஆடுகையில் கடைசியில் வின்னிங் ஷாட் அடிப்பதற்காக தோனி வருவார். அதை சரியாகவும் செய்வார். ஒருவேளை முதலில் பேட் செய்தால் 19 அல்லது 20 வது ஓவரில் எந்த ஆர்டராக இருந்தாலும் வந்துவிடுவார். அங்கே அவருக்கு ஒரே பாணியில்தான் ஆட வேண்டிய தேவை இருக்கும்.

Dhoni
Dhoni

பேட்டை சுழற்றி சிக்சருக்கு மட்டுமே முயல வேண்டும். அதையும் தோனி சரியாக செய்வார். ஆனால், அணி என்றைக்காவது வேகமாக விக்கெட்டுகளை இழந்து, தோனி மிடில் ஓவர்களில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதுதான் பிரச்சனை. தோனி அப்படி இறங்கத் தயாராக இல்லை. அதனால்தான் அணியில் யாரால் பேட்டிங் ஆட முடியுமோ அவர்களையெல்லாம் அவருக்கு முன்பாக இறக்கிவிடுகின்றனர்.

'முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்ட தோனி!'

தோனியின் பக்கம் நின்று யோசித்தால், இதற்கு அவர் தரப்பிலிருந்து ஒரு நியாயமான காரணமும் இருக்கிறது. தோனிக்கு வயதாகிவிட்டது. 10-12 ஓவரில் இறங்கி கொஞ்சம் தட்டி ஆடி ஓடி ஓடி ரன்கள் எடுத்து செட்டில் ஆகி கடைசியில் அதிரடியாக இன்னிங்ஸை முடிக்கும் தோனி இப்போது இல்லை. முதுகு, முட்டி என பல இடங்களில் அவருக்கு காயம் இருக்கிறது. தொடர் சிகிச்சையில்தான் இருக்கிறார். அதனால் முன்பு போல் அவரால் ஓடி ஓடி ரன்கள் சேர்க்க முடியாது. அப்படி செய்தால் மீண்டும் காயமடைவார்.

Dhoni
Dhoni

மேலும், தோனியிடமிருந்த அந்த பழைய கூர்மையான ஆட்டமும் மங்கிவிட்டது. 2020 சீசன் தோனியின் ஐ.பி.எல் கரியரில் மிக மோசமான சீசன். அந்த சீசனில் 200 க்கு நெருக்கமான ரன்களை மட்டுமே எடுத்திருப்பார். பேட்டிங்கில் கூர்மை குறையத் தொடங்குகிறது. தன்னால் மீண்டும் பழையபடி ஆட முடியாது என்பதை தோனி உணர்ந்துகொள்கிறார்.

Dhoni
Dhoni

அந்த சீசனுக்குப் பிறகுதான் பேட்டிங் ஆர்டரில் தன்னை கீழ் இறக்கிக் கொண்டு பேட்டிங் ஆர்டரில் தன்னுடைய முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டார். இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறையெல்லாம் கொண்டு வரப்பட்டு கூடுதலாக ஒரு பேட்டர் ஆடும்படி செய்ததெல்லாம் தோனிக்கு இன்னும் வசதியாக போய்விட்டது. தன்னிடம் இருந்த ஃபினிஷர் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்து விடுவார். ரசிகர்களுக்காக இறங்கி 2 சிக்சர்களை அடிப்பதுதான் தோனியில் வேலை.

'வீணாகும் ஸ்லாட்!'

இக்கட்டான சூழலில் தோனியை இறக்காமல் நம்பர் 9 இல் ஆட வைத்து, அவரை ஒரு முழுமையான விக்கெட் கீப்பர் போல மட்டுமே பயன்படுத்துவது வணிகத்தைத் தவிர அணிக்கு வேறெந்த விதத்திலும் உதவாது. ஒரு ஸ்லாட் வீணாகத்தான் போகிறது. அந்த இடத்தில் ஒரு இளம் விக்கெட் கீப்பர் பேட்டரை ஆட வைத்தால், வருங்காலத்திற்கென வளர்த்தாவது எடுக்கலாம்.

Dhoni
Dhoni

சென்னை அணி இப்போது இரண்டு விஷயங்களை செய்ய முடியும். அதாவது, பேட்டிங் ஆர்டரில் தோனியை கொஞ்சம் மேலே ஏற்றி கூடுதல் பொறுப்பை கொடுக்கலாம். அதை ஏற்க தோனி தயாராக இருக்கிறாரா என்பதும் ஒரு கேள்வி. தோனியால் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ள முடியாது. லெக் ஸ்பின்னரோ இடதுகை ஸ்பின்னரோ வந்தால் இரண்டே ஓவரில் முடிந்து விடுவார்.

தோனி பேட்டிங்கில் தன்னுடைய முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்ள அதுவும் ஒரு காரணம். இல்லையேல் சென்னை அணி தோனியைத் தாண்டி யோசிக்க வேண்டும். தோனி கேப்டனாக இருந்து, தன்னுடைய அணியில் ஒரு வீரர் அவருடைய இமேஜூக்காகவும் ரசிகர்களின் விசில் சத்தத்துக்காகவும் வணிகத்துக்காகவும் மட்டுமே இருக்க வைக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக ஏற்கமாட்டார். பேட்டர் - விக்கெட் கீப்பர் தோனி விஷயத்தில் கேப்டன் தோனி என்ன முடிவெடுப்பார் என யோசித்தாலே சென்னை அணி இந்த சிக்கலிலிருந்து விடுபட்டு விட முடியும்.

Siraj : '7 சீசன்களாக RCBக்காக ஆடியிருக்கிறேன் இருந்தும்...' - உணர்ச்சிவசப்பட்ட சிராஜ்

'குஜராத் வெற்றி!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.... மேலும் பார்க்க

RCB vs GT : இயல்புநிலைக்குத் திரும்பியதா RCB? ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர் - எப்படி வென்றது குஜராத்?

'பெங்களூரு Vs குஜராத்'சின்னச்சாமி மைதானத்தில் முதல் ஆட்டத்தை ஆடி முடித்திருக்கிறது பெங்களூரு அணி. 'உன் ஆளுங்கள பார்த்தா எதிரிக்குதான் பயம். என் ஆளுங்களை பார்த்தா எனக்கே பயம்.' இந்த டோனில்தான் பெங்களூர... மேலும் பார்க்க

LSG vs PBKS: "இதைத்தான் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்" - வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் தொடரில் நேற்று ( ஏப்ரல்1) நடந்தபோட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 17... மேலும் பார்க்க

LSG vs PBKS: கிண்டல் செய்த திக்வேஷ் சிங்; அபராதம் விதித்த பிசிசிஐ; மைதானத்தில் என்ன நடந்தது?

நேற்று ( ஏப்ரல்1) நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்... மேலும் பார்க்க

Nehal Wadhera: 'ரிக்கி பாண்டிங் ஒரு வார்த்தை கூட நெகட்டிவாக பேசமாட்டார்'- கோச் பற்றி நெகிழும் வதேரா

'பஞ்சாப் வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் லக்னோவில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறதுNehal Wadheraஇ... மேலும் பார்க்க