DC vs LSG: முதல் போட்டியிலேயே கே.எல்.ராகுல், நடராஜன் இல்லை... டெல்லிக்கு எதிராகத் தயாரான பண்ட்!
ஐபிஎல் 18-வது சீஸனின் நான்காவது போட்டி விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிடல்ஸ் (DC), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணிகளுக்கு இடைய இன்று மாலை 7:30 மணியளவில் தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய அக்சர் பட்டேல், ``பனியின் காரணத்தால் நாங்கள் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை. அதனால்தான் நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம்.
இதற்கு முன்பு பண்ட்டுடன் நான் விளையாடியிருக்கிறேன். அவருக்கு என்னைப் பற்றித் தெரியும், எனக்கு அவரைப் பற்றித் தெரியும்.
எங்களின் திட்டங்களும் தெரியும். டெல்லி அணிக்காக நிறைய விளையாடியிருக்கிறேன். எங்களிடம் சமநிலையான அணி இருக்கிறது.
மூன்று ஆண்டுகளாக டெல்லி அணியுடன் இருக்கிறேன். ஒரு தலைவனைப் போல நான் சிந்திக்க வேண்டும்." என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய டெல்லியின் முன்னாள் கேப்டனும், லக்னோ அணியின் தற்போதைய கேப்டனுமான பண்ட், ``நானும் முதலில் பந்துவீசத்தான் விரும்பினேன்.
இருந்தாலும் நன்றாக பேட்டிங் செய்து நல்ல ஸ்கோர் எடுப்போம். என் வாழ்க்கை முழுவதும் டெல்லி அணிக்காக நிறைய விளையாடியிருக்கிறேன்.
நிறைய எமோஷன்கள் இருக்கின்றன. நன்றாகத் தயாராகியிருக்கிறோம். எல்லோரும் சரியான மன நிலையில் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
டெல்லி பிளெயிங் லெவன்:
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டு பிளெசிஸ், அபிஷேக் போரல் (WK), சமீர் ரிஸ்வி, அக்சர் படேல் (C), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்.
இம்பேக்ட் பிளேயர் ஆப்ஷன்: கருண் நாயர், அஷுதோஷ் சர்மா, டோனோவன் ஃபெரீரா, திரிபுரானா விஜய், தர்ஷன் நல்கண்டே.
டெல்லி அணியில் மிகவும் எதிர்ப்புக்குரிய வீரர்களான கே.எல்.ராகுல், நடராஜன் ஆகியோர் இம்பேக்ட் பிளேயர் ஆப்ஷனில் கூட இடம்பெறவில்லை.

லக்னோ பிளெயிங் லெவன்:
எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ரிஷப் பண்ட் (wk & c), டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய்
இம்பேக்ட் பிளேயர் ஆப்ஷன்: மணிமாறன் சித்தார்த், அப்துல் சமாத், ஹிம்மத் சிங், ஆகாஷ் சிங், ஆர்.எஸ்.ஹங்கர்கேகர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks