செய்திகள் :

Shardul Thakur: 'பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச் மூலம் பௌலர்களுக்கு அநீதி'- ஷர்துல் தாக்கூர் காட்டம்

post image

'ஆட்டநாயகன் ஷர்துல் தாக்கூர்!'

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. வழக்கமாக அதிரடியில் வெளுத்து வாங்கி 200+ ஸ்கோர்களை அசால்ட்டாக எடுக்கும் சன்ரைசர்ஸ் அணி இந்தப் போட்டியில் 190 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. லக்னோ அணி மிகச்சிறப்பாக பந்துவீசி சன்ரைசர்ஸ் அணியை கட்டுப்படுத்தியிருக்கிறது.

Shardul Thakur
Shardul Thakur

அதிலும் குறிப்பாக ஷர்துல் தாக்கூர் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். ஐ.பி.எல் இல் அவரின் மிகச்சிறந்த பந்துவீச்சு இதுதான். ஷர்துல் தாக்கூர் மெகா ஏலத்தில் 'Unsold' ஆகியிருந்தார். எந்த அணியும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லை. லக்னோ அணியில் மோஷின் கான் திடீரென காயமடைய அந்த அணி ரீப்ளேஸ்மெண்ட் வீரராக ஷர்துல் தாக்கூரை அணிக்குள் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஷர்துலுக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது.

'ஜாகீர்கானின் அழைப்பு!'

ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு ஷர்துல் பேசுகையில், 'ஐ.பி.எல் இல் 'Unsold' ஆன பிறகு எந்த அணியாலும் எடுக்கப்படுவேன் என நம்பவில்லை. ஐ.பி.எல் சமயத்தில் என்ன செய்யலாம் என திட்டமிட்டு கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். அதன்பிறகுதான் ரஞ்சி டிராபியில் ஆடிக்கொண்டிருந்த போது ஜாகீர் கானிடமிருந்து அழைப்பு வந்தது.

'நாங்கள் உங்களை எங்களுக்கேற்ற ரீப்ளேஸ்மெண்ட் வீரராக பார்க்கிறோம். வேறு திட்டங்களை வைத்துக் கொள்ளாதீர்கள் தயாராக இருங்கள்.' என்றார். அதன்பிறகுதான் ஐ.பி.எல் யை பற்றி யோசித்து ஐ.பி.எல் இல் ஆடும் மனநிலைக்கு வந்தேன். ஏலம் நடந்த அன்றைய நாள் எனக்கு சரியாக அமையவில்லை. ஆனாலும் என்னுடைய திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.
Shardul Thakur
Shardul Thakur

அபிஷேக்கும் டிராவிஸ் ஹெட்டும்தான் சன்ரைசர்ஸ் அணிக்காக அதிக ரன்களை அடிக்கிறார்கள். அவர்கள் நிறைய ரிஸ்க் எடுத்து ஆடுகிறார்கள். அதனால் நானும் ரிஸ்க் எடுத்து வீச நினைத்தேன். அதற்கு பலன் கிடைத்தது.

'பௌலர்களுக்கு அநீதி!'

இதுபோன்ற பிட்ச்களில் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் குறைவான உதவியே கிடைக்கிறது. பேட்டிங், பௌலிங் சமநிலையில் இருக்கும் வகையில் பிட்ச்கள் தயாரிக்கப்பட வேண்டும் என கடந்த ஆட்டத்தின்போது கூட சொல்லியிருந்தேன். இம்பேக்ட் பிளேயர் விதிக்குப் பிறகு 240-250 ரன்களை அணிகள் எளிதில் எட்டுகின்றன. அப்படி இருக்கையில் பிட்ச்களும் இப்படி தயார்செய்யப்படுவது பந்து வீச்சாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே நான் பார்க்கிறேன்.' என ஆதங்கப்பட்டார்.

Ruturaj Gaikwad : 'பவர்ப்ளே... மிஸ் ஃபீல்ட்... நம்பர் 3' -தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருத்துராஜ்

'சென்னை தோல்வி!'அசாமின் கவுஹாத்தியில் நடந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியிருக்கிறது. கடைசி ஓவர் வரை திரில்லாக சென்ற இந்தப் போட்டியில் சென்னை அணி ஏ... மேலும் பார்க்க

RR vs CSK : கடைசி வரை போராடிய CSK; RR வென்றது எப்படி?

'திரில் போட்டி!'அசாமின் கவுஹாத்தியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட சென்னை அணி கடைசி ஓவர் வரை திரில்லாக போட்டியை எடுத்துச் சென்று தோற்றிருக்கிறது. சுவாரஸ்யமாக சென்ற இந்தப் போட்டியில் என்ன நடந்தது?CSK'ராஜ... மேலும் பார்க்க

DC vs SRH: `5 விக்கெட் மாமே!' - தடுமாறி சுருண்ட ஹைதராபாத்; மிரட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்

இன்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் களமிறங்கின. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியது. இன்றைய போட்டியில் டெ... மேலும் பார்க்க

RR vs CSK : 'அந்த ரெண்டு பேரும் டீம்ல இல்ல!' - ருத்துராஜ் கொடுத்த அப்டேட்

'டாஸ் முடிவு'சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அசாமின் கவுஹாத்தி மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டிக்கான டாஸை சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் வென்றிருந்தார். முதலில் பந்த... மேலும் பார்க்க

Sai Kishore: 'ஹர்திக் என் நண்பர்தான் ஆனாலும்...' - களத்தில் முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்

'முறைத்துக் கொண்ட ஹர்திக் - சாய் கிஷோர்!'அஹமதாபாத் மைதானத்தில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்றிருக்கிறது. இலக்கை விரட்டிய மும்பை அணி மிக மோசமாக பேட்டிங் ஆடி ... மேலும் பார்க்க