வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!
Ruturaj Gaikwad : 'பவர்ப்ளே... மிஸ் ஃபீல்ட்... நம்பர் 3' -தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருத்துராஜ்
'சென்னை தோல்வி!'
அசாமின் கவுஹாத்தியில் நடந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியிருக்கிறது. கடைசி ஓவர் வரை திரில்லாக சென்ற இந்தப் போட்டியில் சென்னை அணி ஏன் தோல்வியை தழுவியது என்பதைப் பற்றி அந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் பேசியிருக்கிறார்.
'காரணம் சொல்லும் ருத்துராஜ்'
ருத்துராஜ் கெய்க்வாட் பேசுகையில், 'பௌலிங்கில் பவர்ப்ளேயில்தான் நாங்கள் போட்டியை விட்டு விட்டோம் என நினைக்கிறேன். பவர்ப்ளேயில் நாங்கள் இன்னும் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டும். நிதிஷ் ராணா ஸ்கொயருக்கு பின்னால்தான் அடிக்கிறார் என்பதை அறிந்து அவரை முன் பக்கம் நோக்கி ஷாட்களை ஆட வைத்திருக்க வேண்டும்.

அப்படி செய்யத் தவறிவிட்டோம். மேலும், மிஸ் பீல்டுகள் மூலமும் நாங்கள் 8-10 ரன்களை அதிகம் கொடுத்துவிட்டோம். இந்த மைதானத்தில் 180 என்பது எட்டக்கூடிய ஸ்கோர்தான். இன்னிங்ஸ் ப்ரேக்கில் அவர்களை 180 யை சுற்றி மடக்கியதில் மகிழ்ச்சியாகவே இருந்தேன். ஏனெனில், தொடக்கத்தில் அவர்கள் 210 ரன்களை நோக்கி செல்வதைப்போல இருந்தது. அஜிங்கியா ரஹானே நம்பர் 3 இல் இறங்கி எங்களுக்காக சிறப்பாக ஆடியிருக்கிறார்.
அம்பத்தி ராயுடுவும் எங்களுக்காக மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அந்தப் பொறுப்பை இப்போது நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நம்பர் 3 இல் இறங்குகிறேன். இதன் மூலம் அதிரடியாக ஆடக்கூடிய திரிபாதிக்கும் ஓப்பனிங்கில் வாய்ப்பு கிடைக்கும்.

இது ஏலத்தின் போதே முடிவு செய்யப்பட்டதுதான். எனக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. என்னால் ரிஸ்க் எடுத்தும் ஆட முடியும். ஸ்ட்ரைக்கையும் ரொட்டேட் செய்ய முடியும். ஆனால், கடந்த சில போட்டிகளாக எப்படி பார்த்தாலும் முதல் 2 ஓவர்களுக்குள்ளாகவே வந்துவிடுகிறேனே. எங்களுக்கு ஓப்பனிங்கில் ஒரு மொமண்டம் கிடைத்துவிடும்பட்சத்தில், நாங்கள் சிறந்த அணியாக மாறிவிடுவோம். நூர் நன்றாக வீசியிருக்கிறார். கலீல் அஹமது நன்றாக வீசியிருக்கிறார். இதையெல்லாம் இங்கிருந்து பாசிட்டிவ்வாக எடுத்துச் செல்கிறோம்.' என்றார்.