மனோஜ் பாரதிராஜா மறைவு : தனது நண்பனுடன் நடந்து சென்று அஞ்சலி செலுத்திய விஜய்
கடந்த 5 ஆண்டுகளில் 120 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்: ஒடிசா முதல்வர்
ஊழலில் ஈடுபட்டதற்காகக் கடந்த 5 ஆண்டுகளில் 120 அரசு அதிகாரிகள் மற்றும் 39 அதிகாரிகள் கட்டாய ஓய்வு அளித்துள்ளதாக ஒடிசா அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் துருபா சரண் சாஹூவின் கேள்விக்கு ஒடிசா முதல்வர் சரண் மாஜீ எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 120 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 2024-24-க்கு இடையில் ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கியதற்காகவும் 39 அதிகாரிகள் கட்டாய ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும், அரசு அதிகாரிகளிடமிருந்து ரூ.59.47 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்துள்ளது என்று அவர் கூறினார்.
ஆண்டுவாரியான விவரத்தை அளித்த முதல்வர், 2023ல் 31 அரசு அதிகாரிகளும், 2024-ல் 30 பேரும், 2020-ல் 27 பேரும், 2021 மற்றும் 2022ல் தலா 16 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
2021-இல் 23 அதிகாரிகளுக்கும், 2022-இல் 13 பேருக்கும், 2020, 2023 மற்றும் 2024-ல் தலா மூன்று பேருக்கும் முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.