தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!
மின்னல் வேகம், கூர்மையான பார்வை; எம்.எஸ்.தோனியின் ஸ்டம்பிங்கை புகழ்ந்த மேத்யூ ஹைடன்!
எம்.எஸ்.தோனி தனது மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் சூர்யகுமார் யாதவை ஆட்டமிழக்கச் செய்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
இதையும் படிக்க: ருதுராஜ் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான் இருக்கிறேனா? எம்.எஸ்.தோனி கூறியதென்ன?
எம்.எஸ்.தோனிக்கு மேத்யூ ஹைடன் பாராட்டு
நேற்றையப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும் எடுத்தனர்.
மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை தனது மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் எம்.எஸ்.தோனி ஆட்டமிழக்கச் செய்தார். அவரது மின்னல் வேக ஸ்டம்பிங் இணையத்தில் மிகவும் வைரலானது.
இந்த நிலையில், எம்.எஸ்.தோனி தனது மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் சூர்யகுமார் யாதவை ஆட்டமிழக்கச் செய்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பாராட்டியுள்ளார்.
இதையும் படிக்க: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது எப்படி? என்ன சொல்கிறார் ரச்சின் ரவீந்திரா?
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஸ்டம்புக்கு பின்னால் எம்.எஸ்.தோனி மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். நூர் அகமது லெக் திசையில் பந்துவீசினார். ஸ்டம்புக்கு பின்னாலிருந்து விக்கெட் கீப்பிங் செய்யும்போது, பேட்ஸ்மேன் பகுதியளவு பந்தினை மறைத்து விடுகிறார். அப்படி இருந்தும் எம்.எஸ்.தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் மிகவும் அற்புதமாக இருந்தது. மிகுந்த வேகம், பாதுகாப்பான கைகள் மற்றும் நல்ல பார்வை என அனைத்தும் அவரிடம் வியந்து பார்க்கும் அளவுக்கு உள்ளது. இத்தனை வயதிலும் கிரிக்கெட்டில் அவர் மிகவும் அற்புதமாக செயல்படுகிறார் என்றார்.
இதையும் படிக்க: வர்ணனையில் இனவெறி கருத்து! சிக்கலில் ஹர்பஜன் சிங்!
நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை 0.12 நொடியில் மின்னல் வேகத்தில் எம்.எஸ்.தோனி ஸ்டம்பிங் செய்தது குறிப்பிடத்தக்கது.