செய்திகள் :

லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு! 6 பேர் பலி; 4 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்

post image

லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாக்களின் நிலைகள் மீது இஸ்ரேல் தினமும் தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லாக்கள் மீண்டும் ஆயுதமேந்தாமல் இருப்பதற்காக இந்தத் தாக்குதலை நடத்துவதாக அந்நாடு கூறுகிறது.

தெற்கு லெபனானின் டெளலைன் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (சனிக்கிழமை) இரவு நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். 10க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதேபோன்று கடற்கரையையொட்டிய டையர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிரியா எல்லையையொட்டியுள்ள ஹாவ்ஷ் அல்-சையத் அலி பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தத் தகவலை லெபனான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

லெபனானைத் தாக்கியது ஏன்?

வடக்கு இஸ்ரேலின் எல்லை நகரமான மெதுலா பகுதியை குறிவைத்து 6 ஏவுகணைகளை வீசி லெபனான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவுப் படைகள் நிலைகொண்டுள்ள லெபனானின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டிருந்தார்.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

’இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை இந்த அமைப்புதான் நடத்தியது என உறுதிப்படுத்த முடியாது. எனினும், அவை ஹிஸ்புல்லா நிலைக் குழுக்களின் மையப் பகுதிகளில் இருந்து நடந்துள்ளது. ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு முந்தைய நாளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதனிடையே இஸ்ரேல் தாக்குதல் குறித்து பேசியுள்ள லெபனான் பிரதமர் நவாஸ் சல்மான், தெற்கு பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை ராணுவம் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஆனால், போரை மீண்டும் விரும்பவில்லை என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!

இதையும் படிக்க | சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!

அமெரிக்காவால் எதுவும் சாத்தியமே! -கிரீன்லாந்து குறித்து துணை அதிபர் வான்ஸ்

கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவது சாத்தியமே என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ். இவ்விவகாரம் குறித்து ஜே.டி. வான்ஸ் அளித்துள்ள பேட்டியொன்றில், “கிரீன்லாந்தை அமெரிக்கா விலை... மேலும் பார்க்க

ஆசியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு பாகிஸ்தானா?

தெற்காசிய நாடுகளில், வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு என்ற பட்டியலில் பாகிஸ்தான் ஏற்கனவே முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில், கடுமையான பணவீக்கம் காரணமாக தற்போது ஆசிய நாடுகளிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவ... மேலும் பார்க்க

கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்று இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார்.வருகின்ற அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!

காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண... மேலும் பார்க்க

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவா் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா். நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், அதனால் தமக்கு ஆபத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் காவல் துறையினா், தொழிலாளா்கள் சுட்டுக் கொலை! - பயங்கரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் துறையைச் சோ்ந்த 4 பேரும், தொழிலாளா்கள் 4 பேரும் உயிரிழந்தனா். சனிக்கிழமை நடந்த இத்தாக்குதல்கள் குறி... மேலும் பார்க்க