செய்திகள் :

கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!

post image

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்று இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

வருகின்ற அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்த நிலையில், தனது பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராகவும் லிபரல் கட்சித் தலைவராகவும் பொருளாதார நிபுணரான மாா்க் காா்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, கடந்த 14-ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இதையும் படிக்க : டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்!

பிரதமராகப் பதவியேற்றுப் பத்து நாள்களே ஆகும் நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், ”டிரம்ப் நம்மை உடைக்க விரும்புகிறார். அது நடக்க நாங்கள் விடமாட்டோம். டிரம்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கனடாவில் உள்ள 343 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 172 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

தற்போது லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கனடா கட்சிகளிடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஜஸ்டின் ட்ரூடோவுக்கான எதிர்ப்பு காரணமாக கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்திருந்தது.

ஆனால், அவர் பதவி விலகி மார்க் கார்னி பொறுப்பேற்ற பிறகு மீண்டும் ஆளும் லிபரல் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. டிரம்பின் வரி விதிப்பு, அச்சுறுத்தல் உள்ளிட்டவை பிரசாரத்தில் முன்னிலைப்படுத்த இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியா-உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருங்கடல் ... மேலும் பார்க்க

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி: ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலை விவகாரத்தில் அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரியப் போா் முடிவுக்கு வந்ததும் சுன் மியுங் மூன் என்பவரால் கடந்த 1954-இ... மேலும் பார்க்க

இலங்கை இறுதிக்கட்டப் போ்: முக்கிய தளபதிகளுக்கு பிரிட்டன் தடை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு போ் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க

கனடா தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு: உளவுத் துறை அதிகாரி

கனடா பொது தோ்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தியா மட்டுமின்றி ரஷியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கனடா தோ்தலில் தலையிட வாய்ப்புள்ள... மேலும் பார்க்க

முகமது யூனுஸ்-பிரதமா் மோடி சந்திப்பு: இந்தியாவின் பதிலுக்கு காத்திருக்கிறோம்; வங்கதேசம்

வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ்- இந்திய பிரதமா் மோடி இடையேயான சந்திப்பை மேற்கொள்வது குறித்து இந்தியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக வங்கதேசம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. தாய்லாந்து தலைநகா... மேலும் பார்க்க

துருக்கி: போராட்டத் தடை ஏப்ரல் வரை நீட்டிப்பு

துருக்கி தலைநகா் அங்காராவில் போராட்டம் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அங்காரா ஆளுநா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க