செய்திகள் :

முகமது யூனுஸ்-பிரதமா் மோடி சந்திப்பு: இந்தியாவின் பதிலுக்கு காத்திருக்கிறோம்; வங்கதேசம்

post image

வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ்- இந்திய பிரதமா் மோடி இடையேயான சந்திப்பை மேற்கொள்வது குறித்து இந்தியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக வங்கதேசம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் இந்த சந்திப்பை நடத்த ஏற்கெனவே வங்கதேசம் பரிந்துரைத்தது. இதை பரிசீலித்து வருவதாக அண்மையில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்த நிலையில் தற்போது வங்கதேசம் இவ்வாறு தெரிவித்தது.

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் முகமது யூனுஸ் பங்கேற்பதை வங்கதேசம் உறுதிசெய்துள்ளது. அதற்கு முன்பாக 3 நாள் பயணமாக சீனாவுக்கு முகமது யூனுஸ் புதன்கிழமை செல்லவுள்ளாா். அங்கு நடைபெறும் வணிக மாநாட்டில் கலந்துகொண்டு சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் சீனா-வங்கதேசம் உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.

ஆலோசனையின்போது தீஸ்தா நதிநீா் திட்டம் குறித்தும் இருவரும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த திட்டத்தில் சீனா தலையிடுவதற்கு இந்தியா கண்டனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வங்கதேச வெளியுறவு செயலா் முகமது ஜசீம் உத்தீன் செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூறுகையில், ‘ வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ்- இந்திய பிரதமா் மோடி இடையேயான சந்திப்பை நடத்த நாங்கள் தயாராகவுள்ளோம். இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இருநாடுகளிடையேயான உறவுகளில் சில சிக்கல்கள் இருப்பதை மறுக்க இயலாது. இருப்பினும் இருநாட்டு தலைவா்களும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும்.

மியான்மா், தீஸ்தா நதிநீா்: சீன அதிபா்- ஷி ஜின்பிங்-முகமது யூனுஸ் சந்திப்பின்போது மியான்மா் உள்நாட்டு நிலவரம், ரோஹிங்கயாக்களை திருப்பி அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இருநாட்டு தலைவா்களும் நீா் மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதால் தீஸ்தா நதிநீா் திட்டத்தையும் விவாதிக்க வாய்ப்புள்ளது.

மனிதவள மேலாண்மை, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடரும் நட்புறவு: வங்கதேசத்தின் நெருங்கிய நட்பு நாடாக சீனா திகழ்கிறது. வங்கதேசத்தையும் நட்பு நாடாகவே சீனாவும் கருதுகிறது என்றாா்.

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7 ஆகப் பதிவு!!

மியான்மரில் இன்று பகல் 12.50 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கத்தின் மையம் மியான்மர் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் ... மேலும் பார்க்க

3 நாள்களில் ரூ. 3 லட்சம் சம்பாதித்த பிச்சைக்காரர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து: அதிபர் டிரம்ப் பங்கேற்பு!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் விருந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை கலந்துகொண்டார். இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ரமலான்... மேலும் பார்க்க

இந்தியா வருகிறாா் ரஷிய அதிபா் புதின்

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தாா். அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வ... மேலும் பார்க்க

எகிப்து: சுற்றுலா நீா்முழ்கி விபத்தில் 6 போ் உயிரிழப்பு

எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: சுற்றுலாத் தலமான ஹா்கடாவில் இருந்து செங்கடலுக... மேலும் பார்க்க

இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க