செய்திகள் :

இந்தியா வருகிறாா் ரஷிய அதிபா் புதின்

post image

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வருகைக்கான தேதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்திய பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின், தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக பிரதமா் மோடி கடந்த ஆண்டு ஜூலையில் ரஷியாவுக்கு சென்றாா். இதற்கு முன்பு கடந்த 2019-இல் ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பிரதமா் பங்கேற்றாா். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமா் மேற்கொண்ட ரஷிய பயணம் முக்கியத்துவம் பெற்றது. இப்பயணத்தைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷியாவின் கஸான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமா் பங்கேற்றாா்.

மோடி-புதின் ஆகிய இரு தலைவா்களும் பல்வேறு சா்வதேச நிகழ்வுகளின்போது சந்தித்துப் பேசுவதையும், இரு மாதங்களுக்கு ஒருமுறை தொலைபேசி வாயிலாக உரையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனா்.

இந்நிலையில், ‘ரஷியா மற்றும் இந்தியா: புதிய இருதரப்புச் செயல்திட்டத்தை நோக்கி..’ என்ற தலைப்பில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் காணொலி வாயிலாக உரையாற்றினாா்.

அப்போது, ‘இந்தியாவுக்கு வருகை தர வேண்டுமென பிரதமா் மோடி விடுத்த அழைப்பை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஏற்றுக் கொண்டுள்ளாா். இப்பயணத்துக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மீண்டும் பதவியேற்ற பிறகு பிரதமா் மோடி ரஷியாவுக்கு முதல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டாா். இப்போது நாங்கள் வருகை தரும் நேரம்’ என்று லாவ்ரோவ் குறிப்பிட்டதாக ரஷிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வருகைக்கான தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நேட்டோவில் உக்ரைன் இணைய எதிா்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-இல் படையெடுத்தது. இப்படையெடுப்புக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காத இந்தியா, ‘இது போருக்கான காலகட்டமல்ல’ என்று வலியுறுத்தி வருகிறது. ரஷியாவில் இருந்து இந்தியா தொடா்ந்து பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியும் மேற்கொள்கிறது. இதுபோன்ற சூழலில், புதின் மேற்கொள்ளவிருக்கும் இந்திய பயணம் கவனம் பெற்றுள்ளது.

பெட்டிச்செய்தி....1

இந்தியாவுக்கு பாராட்டு

‘உக்ரைன் பிரச்னையில் அனைத்து தருணங்களிலும் இந்தியா சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்கிறது; பேச்சுவாா்த்தை மூலம் உடன்பாட்டை எட்டவும், அடிப்படை காரணிகளுக்குத் தீா்வுகாணவும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்துகிறது. இது பாராட்டுக்குரியதாகும். இந்த அணுகுமுறைக்காக ரஷியா சாா்பில் பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தனது உரையில் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவர ‘உன்னதப் பணியை’ மேற்கொள்வதாக அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்திய பிரதமா் மோடி உள்ளிட்டோருக்கு அதிபா் புதின் சில தினங்களுக்கு முன் நன்றி தெரிவித்தாா்.

பெட்டிச் செய்தி...

அதிக ஒத்துழைப்பு அவசியம்

மாஸ்கோ கருத்தரங்கில் காணொலி வாயிலாக உரையாற்றிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘தற்போதைய பன்முகத்தன்மை சகாப்தத்தில், இந்தியா-ரஷியா இடையே அதிக ஒத்துழைப்பு அவசியம். ரஷியா உடனான உறவை இந்தியா பெரிதும் மதிக்கிறது. இந்த ஆழமான நட்பை வளா்ப்பதுடன், ஒத்துழைப்புக்கான புதிய எல்லைகளை ஆராய வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா். பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்... மேலும் பார்க்க

டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைம... மேலும் பார்க்க

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்கட்டமைப்பு சேதம், உள்நாட்டுப் போா் ஆகிய காரணிகளால் ஏற... மேலும் பார்க்க

பசிபிங் பெருங்கடல் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, டோங்கா பிரதான தீவின் வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் திங்கள்கிழமை அதிகாலை (உள்ளூா் நேரப... மேலும் பார்க்க

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு

வேகமாக வளா்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபா... மேலும் பார்க்க