தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
பசிபிங் பெருங்கடல் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, டோங்கா பிரதான தீவின் வடகிழக்கே 100 கி.மீ. தொலைவில் திங்கள்கிழமை அதிகாலை (உள்ளூா் நேரப்படி) நிலநடுக்கம் நிகழ்ந்தது.
ரிக்டா் அளவுகோலில் 7.1 அலகாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னா் திரும்பப் பெறப்பட்டது. முதல்கட்ட தகவலின்படி இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து 3,500 கி.மீ. தொலைவில் அமைந்த டோங்கா தீவு, 171 சிறு தீவுகளை உள்ளடக்கியது. இத்தீவுகளில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் பிரதான தீவான டோங்காதபுவில் உள்ளனா்.