``டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச...
3 நாள்களில் ரூ. 3 லட்சம் சம்பாதித்த பிச்சைக்காரர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை அந்நாட்டு அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இருப்பினும், அவ்வப்போது அரசின் எச்சரிக்கையை சிலர் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், ஷார்ஜா நகரில் ஒரு மசூதி அருகே ஒருவர் பிச்சை எடுப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, மசூதிக்கு சென்ற காவல்துறையினர், தகவல் தெரிவிக்கப்பட்ட பிச்சைக்காரரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கைது செய்யப்பட்டவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்றும், வெறும் 3 நாள்களில் பிச்சை எடுத்ததன் மூலம் ரூ.3.26 லட்சம் (14,000 திர்ஹாம்) சம்பாதித்ததும் தெரிய வந்தது.
அந்நாட்டில் ரமலான் மாதத்தின்போது, பிச்சை எடுப்பது குற்றச்செயல் போன்றது. பிச்சை எடுப்பதை சிலர் பருவகாலத் தொழிலாகவும் கொண்டுள்ளனர்.
துபையில், ரமலான் மாதத் தொடக்கத்தில் 127 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.11.66 லட்சத்துக்கும் (50,000 திர்ஹாம்) அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க:குஜராத்தில் 54 தொடக்கப் பள்ளிகள் மூடல்! 341 பள்ளிகள் ஒரே அறையில்!