அமித் ஷா மேஜையில் மாஜிக்கள் Files! சரணடைந்த எடப்பாடி?! | Elangovan Explains
வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து: அதிபர் டிரம்ப் பங்கேற்பு!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் விருந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை கலந்துகொண்டார்.
இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ரமலான் இப்தார் விருந்தை நடத்தினார்.
இந்த நிகழ்வில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “தேர்தலின் போது தன்னை ஆதரித்த லட்சக்கணக்கான அமெரிக்க முஸ்லிம்களுக்கு நன்றி!. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், முஸ்லிம் சமூகத்தினர் எங்களுடன் இருந்தனர். தேர்தலின் போது எங்களுடன் இருந்ததால், உங்களுடன் நான் இருக்க விரும்புகிறேன்.
இஸ்லாமிய சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அவர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவிற்கு மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்தவும் முயன்று வருகிறோம்” என்றார்.
இதையும் படிக்க: தவெக பொதுக் குழு: விஜய் வருகை!