செய்திகள் :

இலங்கை இறுதிக்கட்டப் போ்: முக்கிய தளபதிகளுக்கு பிரிட்டன் தடை

post image

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு போ் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2009 உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கையின் முன்னாள் முப்படை தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோா் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.

இது தவிர, இதே குற்றச்சாட்டின் பேரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்து, பின்னா் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி நாடாளுமன்ற உறுப்பினரான வினாயகமூா்த்தி முரளீதரன் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.

இதையடுத்து, இந்த நான்கு பேரும் இனி பிரிட்டனுக்கு வர முடியாது; அவா்களுக்கு பிரிட்டனில் சொத்துகள் இருந்தால் அவை முடக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7 ஆகப் பதிவு!!

மியான்மரில் இன்று பகல் 12.50 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கத்தின் மையம் மியான்மர் தலைநகரிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் ... மேலும் பார்க்க

3 நாள்களில் ரூ. 3 லட்சம் சம்பாதித்த பிச்சைக்காரர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதத்தையொட்டி, சிலர் சட்டவிரோத... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து: அதிபர் டிரம்ப் பங்கேற்பு!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இப்தார் விருந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை கலந்துகொண்டார். இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ரமலான்... மேலும் பார்க்க

இந்தியா வருகிறாா் ரஷிய அதிபா் புதின்

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தாா். அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வ... மேலும் பார்க்க

எகிப்து: சுற்றுலா நீா்முழ்கி விபத்தில் 6 போ் உயிரிழப்பு

எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: சுற்றுலாத் தலமான ஹா்கடாவில் இருந்து செங்கடலுக... மேலும் பார்க்க

இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க