டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.86-ஆக முடிவு!
நள்ளிரவில் பயங்கரம்... மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!
மதுரை தனக்கன்குளத்தில் ரெளடி காளீஸ்வரன் என்பவர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடியான காளீஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்களில் மர்ம நபர்கள் அரிவாளால் காளீஸ்வரனை வெட்ட முயன்றனர். இதையடுத்து, அவர் ஓட முயற்சி செய்துள்ளார். இவரைப் பின்தொடா்ந்து விரட்டிச் சென்ற மர்மநபர்கள், காளீஸ்வரனை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதையும் படிக்க: சிக்ஸர்களை குறிவைக்கும் தோனி: சிஎஸ்கே கேப்டன்
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காளீஸ்வரன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காளீஸ்வரன் ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
இவ்வழக்கு தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.