நகைப் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டர்; காட்டிக்கொடுத்த ஷு: காவல் ஆணையர் அருண் விளக...
பூண்டி நீர்த்தேக்க கொள்ளளவை உயர்த்த நீர்வளத்துறை திட்டம்!
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பூண்டி நீர்த்தேக்கம், பெருநகர சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாகும்.
பெருகி வரும் சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய, நீர்நிலைகளின் சேமிப்பு கொள்ளளவை அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவை ஆகும். அவற்றில் ஒன்று பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரிப்பதாகும்.
இதையும் படிக்க: தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? - அன்புமணி கேள்வி
அதன்படி, நீர்த்தேக்கத்தின் முழு நீர் மட்டத்தை மேலும் இரண்டு அடி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய ரூ. 48 லட்சத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தை பலப்படுத்தி நீர்மட்டத்தை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்துவதன் மூலம் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 3.231 டி.எம்.சி. யிலிருந்து 3.971 டி.எம்.சி-யாக உயர்த்த இயலும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, தற்போது உள்ள கொள்ளளவினைவிட 0.74 டி.எம்.சி நீரை கூடுதலாக சேமிக்க இயலும்.
தற்போது இத்திட்டத்திற்கான விரிவான ஆய்வுப் பணிகள் முடிவுற்று விரிவான திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.