மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைத்தது உச்சநீதிமன...
பழநி: உள்கட்சி மோதல், முகநூல் பதிவு.. பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக பிரமுகர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியப்பாநகரைச் சேர்ந்தவர் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ். இவர் பாஜக நிர்வாகியான ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைத்துரை மனைவி குறித்து அவதூறாக பேசிய ஆடியோ ஒன்று வெளியானது.
அதில் கனகராஜ், உள்கட்சி பிரச்னை விவகாரங்கள் குறித்தும், தன்னைப் பற்றி முகநூலில் செய்துள்ள பதிவுகளை நீக்கும்படி எல்லைத்துரையை மிரட்டுகிறார். மேலும் எல்லைத்துரையின் மனைவி குறித்தும் அவதூறாக பேசுகிறார்.

இதுகுறித்து எல்லைத்துரையின் மனைவி புவனேஸ்வரி பழநி தாலூகா போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், பெண்ணை மானபங்கம் செய்யும் வகையில் அவதூறாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.
நேற்று பழநி தாலுகா காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட கனராஜூக்கு ஆதரவாக பாஜகவினர் திரண்டனர். யாரையும் உள்ளே வந்துவிடாமல் தடுப்பதற்காக காவல் நிலையத்தை போலீஸார் பூட்டினர். இதனால் பழநியில் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து பழநியைச் சேர்ந்த பாஜகவினரிடம் விசாரித்தபோது, ``எல்லைத்துரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம் கனகராஜ் தான் என நினைத்து, அவருக்கு எதிராக எல்லைத்துரை முகநூலில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். இதை கண்டிக்கும் விதமாக பேசிய கனகராஜின் ஆடியோவை வெளியிட்டதால் பிரச்னை பெரிதாகிவிட்டது. மேலும் கனகராஜ் மீது நடவடிக்கை கோரி எல்லைத்துரை நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் தான் கனகராஜை போலீஸார் கைது செய்துள்ளனர்'' என்று தெரிவித்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
