சிவகங்கை: பயிற்சி மருத்துவருக்குப் பாலியல் தொல்லை; நள்ளிரவு மருத்துவக் கல்லூரியில் என்ன நடந்தது?
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நேற்று (மார்ச் 24) இரவு விடுதிக்குச் சென்ற பயிற்சி மருத்துவர் மீது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்குள்ள மருத்துவமனையில் நாள்தோறும் ௧௦௦௦-க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், 300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 24) நள்ளிரவு மருத்துவமனையில் பணி முடித்து விட்டு அந்த வளாகத்தில் உள்ள விடுதிக்குத் தனியாகச் சென்றுகொண்டிருந்த பயிற்சி மருத்துவ மாணவியைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், மாணவியின் முகத்தில் துணியால் மூடி பாலியல் வன்முறை செய்ய முயன்றிருக்கிறார்.
மாணவி சத்தம் எழுப்ப அப்போது அந்த வளாகத்துக்குள் ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதை அறிந்த மர்ம நபர், மாணவியை விட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி, விடுதிக்குச் சென்று சக மாணவிகளிடம் தனக்கு நடந்ததைத் தெரிவிக்க, உடனே தகவல் பரவி அனைத்து மாணவ, மாணவிகளும் மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷீஸ் ராவத் தலைமையிலான காவல்துறையினர் வந்து மாணவியிடம் விசாரணை நடத்தி அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவத்தால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (மார்ச் 25) பயிற்சி மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்துள்ளனர்.
இதற்கிடையே மருத்துவக்கல்லூரி வளாகத்தில் போதிய விளக்குகளோ, கண்காணிப்பு கேமராக்களோ அமைக்கவில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பயிற்சி மருத்துவருக்குப் பாலியல் ரீதியாக நடந்த அத்துமீறல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks