செய்திகள் :

பெட்ரோல் நிலையத்தில் தகராறு: ஊழியர் அடித்துக் கொலை!

post image

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியருக்கும் லாரி ஓட்டுநர் - கிளீனர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தங்கி வேலை செய்து வருபவர் தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகாவைச் சேர்ந்த வீரகாளி( 40).

இவர் நேற்று(மார்ச் 23) வழக்கம்போல பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியில் இருந்தபோது, லாரி ஒன்று பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளது. அப்போது பெட்ரோல் நிரப்பும் பகுதி அருகே மோதுவதுபோல் வந்ததால் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை திட்டி உள்ளனர்.

அப்போது இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்து சென்ற லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் லாரியை சாலையில் நிறுத்திவிட்டு, பின்னர் மது அருந்தி உள்ளனர்.

மது போதையில் லாரியின் சக்கரத்தை கழற்றப் பயன்படும் இரும்பு ராடையும் ஒரு இரும்பு கம்பியையும் எடுத்துக்கொண்டு மீண்டும் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளனர்.

அப்போது வீரகாளி தூங்கிக் கொண்டிருந்துள்ள நிலையில், அவரை இருவரும் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில் மண்டை உடைந்து ரத்தம் அதிகமாக வெளியேறி வீரகாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையும் படிக்க: நிதீஷ் குமார் மகனுக்கு திருமணமா? மணப்பெண் யார்?

இதனையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிந்தவுடன் கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உளவு பிரிவு காவலர் நிதி குமார் ஆகியோர் லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனரை பிடிக்கச் சென்றனர்.

அப்போது, லாரி ஓட்டுநரான தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணகுமார் (27) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (31) ஆகிய இருவரும் போலீஸார் இடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் கை எலும்பு முறிந்தது.

இவர்களைப் பிடித்த போலீஸார், அரசூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!

தமிழகத்தில் 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் சேவைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட... மேலும் பார்க்க

நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு ... மேலும் பார்க்க

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் என்வுகன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். தரமணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாஃபர் குலாம் ஹுசைன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தி... மேலும் பார்க்க

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

கோவை விமான நிலைய விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிதிக்காக சொத்து வரி உயா்வு: கே.என்.நேரு

மத்திய அரசின் நிதிக்காகத்தான் சொத்துவரி உயா்த்தப்பட்டதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா். நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலு... மேலும் பார்க்க

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி: அமைச்சா் கே.என்.நேரு

மீஞ்சூா் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதா... மேலும் பார்க்க