செய்திகள் :

IPL 2025 : 'தோனியோட சக்சஸ் சீக்ரெட் இதுதான்!' - CSK-வின் முன்னாள் வீரர் பாலாஜி பேட்டி

post image

18 வது ஐ.பி.எல் சீசன் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் ஐ.பி.எல் யை ஒளிபரப்பவிருக்கும் JioStar நிறுவனம் அவர்களின் Expert குழுவை சேர்ந்த முன்னாள் வீரர் பாலாஜியுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பாலாஜியுடன் உரையாடியதிலிருந்து முக்கிய விஷயங்கள் இங்கே.

சென்னை அணியின் முன்னாள் வீரர் பாலாஜி
Balaji

இந்த ஐ.பி.எல் சீசனில் நிறைய தமிழக வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எந்த மாதிரியான செயல்பாட்டை எதிர்பார்க்கலாம்?

ஐ.பி.எல் மூலம் நிறைய தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது ஒரு நீண்ட பயணம் இந்த பயணத்தில் நிறைய தமிழக வீரர்கள் இந்திய அணியில் விளையாட சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், முக்கிய நகரங்களில் இருந்தும் திறமையான வீரர்களை ஐ.பி.எல் வெளிக்கொண்டு வந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் புதிய தமிழக வீரர்கள் களம் இறங்குகிறார்கள். எனவே நான் ஐ.பி.எல் யை தமிழக வீரர்களுக்கான சிறந்த தளமாக பார்கிறேன். ஒரு சீசனில் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அறிமுகமாகி தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளதை பார்த்திருக்கிறோம். மற்றொரு சீசனில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான் ஆகியோர் அறிமுகமாகி திறமையை வெளிப்படுத்தியுள்ளதையும் பார்த்துள்ளோம்.

இப்போது குர்ஜப்நீத் சிங், ஆண்ட்ரே சித்தார்த் போன்ற இளைஞர்கள் வாய்ப்பு பெற்றுள்ளது பார்க்கிறோம். எனவே ஐ.பி.எல் திறமையான வீரர்களை வெளிக்கொண்டு வரும் முக்கியமான களம் என்பதாக நான் பார்க்கிறேன். நட்சத்திர வீரர்களான எம் எஸ் தோனி போன்ற தலைமைத்துவம் கொண்ட வீரர்கள், சுப்மன் கில் போன்றவர்களுடன் நின்று விளையாடி தனது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை அவர்கள் பெறுகிறார்கள்.

கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ், நாதன் எல்லிஸ், சாம் கரண் மற்றும் ஜேமி ஓவர்டன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் சிஎஸ்கே அணியில் இருக்கிறார்கள். இவர்கள் 23ஆம் தேதி நடக்கும் MI vs CSK போட்டியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்?

கடந்த சீசனில் பதிரனா பற்றிய உடல் தகுதி குறித்து கவலை இருந்தது. ஆனால் இப்போது அந்த கவலைக்கு இடமில்லை. டெத் பவுலிங்கை பொறுத்தவரை சிறந்த பௌலராக பிராவோ இருந்தார். அந்த இடத்தை தற்போது பதிரனா நிரப்புகிறார். பிராவோ போலவே அவரும் சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறேன்.

அன்ஷுல் காம்போஜ் புதிய பந்தை வீசினால் விக்கெட் விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சேப்பாக் ஸ்டேடியத்தில் சமீப காலங்களில் நிறைய பவுன்ஸ் இருக்கிறது. அந்த நேரத்தில் புதிய பந்துகள் அவருக்கு கை கொடுக்கும் என்று நினைக்கிறேன். அன்ஷுல் கம்போஜ் சிறப்பாக செயல்பட வேண்டும். அவர் சிறப்பாக செயல்பட்டால் நிறைய விக்கெட்டுகள் விழ வாய்ப்பு இருக்கிறது.

கலீல் அகமது
கலீல் அகமது

இந்த சீசனில் குர்ஜப்நீத் உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். இந்த சீசனில் அவர் தமிழ்நாட்டுக்காக விளையாடி இருக்கிறார். பட்டியலில் அதிகம் பேர் இருந்தாலும் குர்ஜப்நீத் விளையாட்டினை நான் பார்க்க விரும்புகிறேன். சாம் கரண் இதற்கு முன்பு சிஎஸ்கே அணிக்காக விளையாடியிருக்கிறார். பேட்டிங் பௌலிங் என ஒரு ஆல்ரவுண்டராக அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறேன்.

வருண் சக்கரவர்த்தி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார். அதேபோல ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாட்டு எப்படி இருக்கும்?

வருண் சக்கரவர்த்தி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். முதலில் 20 ஓவர் போட்டிகளில் தன்னுடைய திறனை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பிறகு 50 ஓவர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். ஒரு முக்கியமான போட்டியில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் மூன்று போட்டியில் தான் விளையாடியிருந்தார். ஆனால் அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தன்னுடைய சிறந்த பந்துவீச்சால் விக்கெட்டுகளை அள்ளினார். தன்னை 20 ஓவர் போட்டிகளில் இருந்து 50 ஓவர் போட்டிகளுக்கு மெருகேற்றி உள்ளார். அது அவ்வளவு சுலபம் கிடையாது.

Varun Chakaravarthy
Varun Chakaravarthy

50 ஓவர் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பான பவுலிங்கை நிலையாக வைத்திருக்க வேண்டும். அவர் அதனை சரியாக செய்துள்ளார். இனிமேல் 50 ஓவர் போட்டிகளில் இந்தியாவிற்காக அவர் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். அதேமாதிரி, வழக்கம்போல ஐ.பி.எல் லிலும் சிறப்பாக செயல்படுவார்.

ஐ.பி.எல் இல் இந்த சீசனில் சொந்த டீமில் இருந்து சில பிளேயர்கள் வேறு டீம்க்கு மாறி உள்ளனர். இந்த மாற்றத்தினால் போட்டிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?

மற்ற அணிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் ஆகிய அணிகளில் பெரிய அளவில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரே மாதிரியான பிளேயர்கள் ஒரே அணியில் பல ஆண்டுகளாக இருப்பதால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்படும். அந்த ஒற்றுமை இந்த அணிகளிடம் இருக்கிறது. அதனால்தான் இந்த மூன்று அணிகளும் ஒட்டுமொத்தமாக 13 சீசன்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த அணிகளில் கேப்டன்கள் மட்டுமே தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தாமல், ஒட்டு மொத்தமாக அனைத்து வீரர்களும் தலைமைத்துவ குணாதிசயங்களை வெளிப்படுத்துகின்றனர். இதனால் எளிமையாக போட்டிகளில் வெற்றி பெறுகிறார்கள்.

சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சென்னை அணி
பயிற்சியில் சென்னை அணி

புதிய டீமாக இருந்தால் இவ்வாறு அமைவதற்கு கொஞ்சம் காலம் தேவைப்படும். ஆனால் ஏற்கனவே இருந்த டீம்களுக்கு இந்த ஒற்றுமை எப்போதும் போலவே அதிகமாக இருக்கும். அதற்கு கொஞ்சம் காலம் தேவைப்படும். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி உருவாகி புதிய பிளேயர்கள் கொண்டே தங்களுடைய முதல் சீசனிலேயே வெற்றி பெற்றார்கள். அதனால் எதற்கும் விதிவிலக்கு உண்டு.

சென்னை அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டை முதலில் நீங்கள் தான் எடுத்தீர்கள். அதன் பிறகு எந்த சென்னை பௌலர்களும் ஹாட்ரிக் எடுக்கவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் பௌலர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது என நினைக்கிறீர்களா?

எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் மாற்றம் என்பது இருக்கிறது. கடந்த சீசனில் 270, 280 ரன்களை கூட சுலபமாக சேசிங் செய்து வெற்றி பெற்றார்கள். இப்போதும் கூட அவர்களால் அது முடியும். கடந்த 15 வருடங்களாக பேட்ஸ்மேன்களின் சேசிங் சிறப்பாக இருந்துள்ளது. முன்பிருந்த தலைமுறைக்கும், இப்போதுள்ள தலைமுறை பேட்ஸ்மேனிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இப்போதுள்ள பேட்ஸ்மேன்கள் பயமே இல்லாமல் பந்துகளை எதிர்கொள்கிறார்கள். புதுவிதமான பேட்டிங் ஸ்டைலை கொண்டு வருகிறார்கள். அதற்கேற்ப பௌலர்களிடமும் நிறைய மாற்றங்கள் இருக்கிறது.

Jadeja
Ravindra Jadeja

மிஸ்டரி ஸ்பின்னர்ஸ், ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ் அணிக்காக உறுதுணையாக இருக்கிறார்கள். இந்திய அணியில் நான்கு சிறந்த பின்னர்களை வைத்து விளையாடுகிறார்கள். குல்தீப், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி என இந்த ஸ்பின்னர்கள் அனைவருமே ஐ.பி.எல்லில் இருந்து வந்தவர்கள் தான். ஒயிட் பால் கிரிக்கெட்டில் நான்கு ஸ்பின்னர்களை வைத்து விளையாடக்கூடிய அணியாக இந்திய அணி இருக்கிறது. அந்த அளவிற்கு பௌலிங்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வெறுமனே பேட்டர்கள் தான் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று நாம் சொல்ல முடியாது. பௌலர்களும் சிறப்பாக செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த சீசனில் எந்த அணிகள் சிறப்பாக விளையாடி பிளே ஆஃப்ஸூக்கு செல்ல வாய்ப்புள்ளது?

நிறைய அணிகள் புதிய அணிகளாக மாறி உள்ளன. நிறைய வீரர்கள் வேறு அணிகளுக்கு இடம் மாறி உள்ளனர். லக்னோ அணியில் இருந்து கே.எல். ராகுல் டெல்லி அணிக்கு மாறியுள்ளார். டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கு மாறி உள்ளார். ஸ்ரேயாஷ் ஐயர் கொல்கத்தா அணியில் இருந்து பஞ்சாப் அணிக்கு மாறியுள்ளார். அங்கு அவர்கள் ஒரு டீமாக செட் ஆக வேண்டும். அந்த அணிகளுடன் அவர்கள் உடனடியாக சேர்ந்து பணியாற்ற வேண்டும். வெற்றியையும் தோல்வியையும் எவ்வாறு அணுகுகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப்ஸூக்கு செல்லும் என்பதை சொல்ல முடியும்.

தோனியிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன?

எந்த வீரராக இருந்தாலும் 30 வயதை தாண்டினால் உடற்தகுதியை தற்காப்பது கடினம். ஆனால், தோனி இன்னமும் ஃபிட்டாக இருக்கிறார். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கடந்த வருடத்தில் நான் பார்த்த அவருடைய அனைத்து போட்டோக்களிலும் ஃபிட்டாகவும், அமைதியாகவும் இருக்கிறார். அவர் ஒரு நல்ல கேப்டன், டீம் லீடர், சிறந்த விக்கெட் கீப்பர் என்று நமக்குத் தெரியும்.

Dhoni
Dhoni

தோனியின் திறமைக்கும், தலைமைத்துவ பண்பிற்கும் யாராலும் ஈடு கொடுக்க முடியாது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும், உறுதியாக இருந்தால் தான் இவ்வாறு விளையாட முடியும். இந்த வயதிலும் அவர் ஃபிட்டாக இருந்து பேட்டிங்கில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். இதுதான் எம் எஸ் தோனியிடம் என்னை கவர்கிற விஷயமாக இருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

CSK Vs MI : 'தோனியை Impact Player ஆக இறக்குவீர்களா?' - ருத்துராஜ் சுவாரஸ்ய பதில்!

சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவிருக்கும் ஐ.பி.எல் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்திருந்தது. அதில் சென்னை அணியின் க... மேலும் பார்க்க

CSK vs MI : 'தோனி Uncapped ப்ளேயரா?' - பத்திரிகையாளர் சந்திப்பில் சிரித்து உருண்ட சூர்யகுமார்!

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இன்று போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு நடந்திருந்தது. அதில், மும்பை அணியின் கேப்டன்... மேலும் பார்க்க

KKR Vs RCB : 'ஈடன் கார்டனில் மழை பெய்தால் என்ன நடக்கும்?' - Kolkata Weather Report

18 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி இன்று இரவு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. கொல்கத்தாவும் பெங்களூரும் மோதப்போகும் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வானிலை... மேலும் பார்க்க

IPL 2025: விதிகளை மீறினால் 5 போட்டிகளில் ஆட தடை? Demerit Points System Explained!

18 வது ஐ.பி.எல் சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில், பிசிசிஐ சில புதிய விதிமுறைகளை இப்போது அறிவித்திருக்கிறது. அதில், வீரர்களோ அணியின் பயிற்சியாளர் குழுவோ விதிகளை மீறினால் 5 போட்டிகள் வரைக்கும... மேலும் பார்க்க

IPL 2025: தொடக்கவிழாவில் கலக்கும் ஷாரூக்கான், சல்மான் கான்! - முழு விவரம்

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 18வது சீசன் இன்று தொடங்க உள்ளது . ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை காண எவ்வள... மேலும் பார்க்க