செய்திகள் :

IPL 2025: தொடக்கவிழாவில் கலக்கும் ஷாரூக்கான், சல்மான் கான்! - முழு விவரம்

post image

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 18வது சீசன் இன்று தொடங்க உள்ளது . ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை காண எவ்வளவு ஆர்வமாக உள்ளனரோ அதே அளவிற்கு அதன் துவக்க விழா மீதும் எதிர்பார்ப்புகள் எகிறும் . வருடா வருடம் புதிது புதிதாக பல முன்னெடுப்புகளை பிரமாண்டமான முறையில் ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்பாடு செய்து மக்களை ஆச்சரியப்படுத்துவர். அந்த வகையில் 18 வது ஐ.பி.எல் சீசன் துவக்க விழா கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

ஐ.பி.எல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக அத்தனை அணிகளின் கேப்டன்களும் இணைந்து எடுத்துக் கொண்ட குழு படம்.
IPL Captains

முதல் போட்டியான கொல்கத்தா அணிக்கும் பெங்களூர் அணிக்கும் நடைபெறவிருக்கும் ஆட்டம் இன்று இரவு 7:30 மணியளவில் நடக்க உள்ளது. அதன் முன்னர் ஆறு மணியளவில் பிரம்மாண்டமான துவக்க விழாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் தயார் செய்து வருகிறது. பிரபலமான பல பாலிவுட் நடிகர்கள் ,பாடகர்கள், இசை கலைஞர்கள் நடன கலைஞர்கள் என பெரும் பட்டாளமே மக்களுக்கு பொழுதுபோக்கை வழங்க தயாராகி வருகிறது.

நிகழ்ச்சிக்கு உயிரூட்டவிற்கும் உச்ச நட்சத்திரங்கள்:

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி துவக்க விழாவில் பாலிவுட்டின் பிரபல நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், விக்கி கௌஷல் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் திரை உலக பிரபலங்களான கத்ரீனா கைஃப், பிரியங்கா சோப்ரா, திரிப்தி டிம்ரி, அனன்யா பாண்டே, மாதுரி தீட்சித், ஜான்வி கபூர், ஊர்வசி ரவுடேலா, பூஜா ஹெக்டே, கரீனா கபூர், ஆயுஷ்மான் குரானா மற்றும் சாரா அலி கான் என ஒரு நட்சத்திரக் கூட்டமே கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இது மட்டுமின்றி ஷ்ரத்தா கபூர், வருண் தவான், அரிஜித் சிங், திஷா பதானி, ஸ்ரேயா கோஷல் மற்றும் கரண் அவுஜ்லா ஆகியோரின் நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

பாலிவுட் முதல் பாப் இசை வரை:

அமெரிக்க பாப் இசைக்குழுவான 'ஒன் ரிபப்ளிக்' இசைக்குழுவின் நிகழ்ச்சியையும் நடத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது கூட்டத்தினரை எழுந்து நின்று அவர்களின் ஹிட் பாடல்களுடன் சேர்ந்து பாட வைக்கும் என்பது உறுதி.‌

முதல் போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூர் இடையில் நடப்பதால் கொல்கத்தா அணியின் துணை உரிமையாளரான ஷாருக்கான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்த உள்ளார்.

சல்மான் கான் தனது அடுத்த திரைப்படமான 'சிக்கந்தர்' படத்தின் ப்ரோமோஷனின் ஒரு அங்கமாக ஐ.பி.எல் துவக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

IPL 2025

பிரபல பாடகர் அரிஜித் சிங் மற்றும் ஸ்ரேயா கோஷல் தங்கள் பாடல்கள் மூலம் உருக வைக்க உள்ளனர். ஷ்ரதா கபூர் மற்றும் வருண் தவான் உற்சாக‌ நடனமாடி மகிழ்விக்க உள்ளனர் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய திரை நட்சத்திரங்கள் பாடகர்கள் மற்றும் கலைஞர்களின் நிகழ்ச்சியுடன் இந்த ஐபிஎஸ் சீசன் கோலாகலமாக துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

KKR Vs RCB : 'ஈடன் கார்டனில் மழை பெய்தால் என்ன நடக்கும்?' - Kolkata Weather Report

18 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி இன்று இரவு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. கொல்கத்தாவும் பெங்களூரும் மோதப்போகும் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வானிலை... மேலும் பார்க்க

IPL 2025: விதிகளை மீறினால் 5 போட்டிகளில் ஆட தடை? Demerit Points System Explained!

18 வது ஐ.பி.எல் சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில், பிசிசிஐ சில புதிய விதிமுறைகளை இப்போது அறிவித்திருக்கிறது. அதில், வீரர்களோ அணியின் பயிற்சியாளர் குழுவோ விதிகளை மீறினால் 5 போட்டிகள் வரைக்கும... மேலும் பார்க்க

'5 ஒலிம்பிக்ஸ் போயிட்டேன் ஆனாலும்..' - Sharath Kamal about his Career and Indian Sports | Vikatan

சரத் கமல், இந்தியாவின் டேபிள் டென்னிஸ் முகம். ஒரு முறை ஒலிம்பிக்ஸில் பங்கேற்று 'ஒலிம்பியன்' என்ற பெருமையை பெறுவதே பல வீரர்களுக்கும் வாழ்நாள் கனவு. அப்படியிருக்க சரத் கமல் 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸ் தொடங... மேலும் பார்க்க

MI : '2 நிமிட தாமதத்தால் கேப்டன்சிக்கு தடை; சூர்யா மும்பை அணியை வழிநடத்துவார்!' - ஹர்திக் அறிவிப்பு

18 வது ஐ.பி.எல் சீசன் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்... மேலும் பார்க்க

Ashwin: "என் 100வது டெஸ்ட்டுக்கு தோனியை அழைத்தும் வரவில்லை; ஆனால்..." - சுவாரஸ்யம் பகிரும் அஷ்வின்

'Leo - The Untold Story Of Chennai Super Kings' என்ற புத்தகத்தைத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று ஒரு தனியார் ஹோட்டலில் நடந்திர... மேலும் பார்க்க