இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளா்ச்சி: பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன்
'5 ஒலிம்பிக்ஸ் போயிட்டேன் ஆனாலும்..' - Sharath Kamal about his Career and Indian Sports | Vikatan
சரத் கமல், இந்தியாவின் டேபிள் டென்னிஸ் முகம். ஒரு முறை ஒலிம்பிக்ஸில் பங்கேற்று 'ஒலிம்பியன்' என்ற பெருமையை பெறுவதே பல வீரர்களுக்கும் வாழ்நாள் கனவு. அப்படியிருக்க சரத் கமல் 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்கி கடைசியாக நடந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வரைக்கும் 5 ஒலிம்பிக்ஸில் பங்கேற்றிருக்கிறார். பாரிஸ் ஒலிம்பிக்ஸின் அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்தி இந்தியக் குழுவை வழிநடத்தி சென்றிருந்தார். தமிழகத்திலிருந்து புறப்பட்டு இந்தியாவுக்காக பெருமை சேர்த்த சரத் கமல் இப்போது டேபிள் டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.