வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி: 4 போ் கைது
தொகுதி மறுசீரமைப்பு: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் அடுத்தாண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில் சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநில முதல்வர் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 24 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்காத ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.