செய்திகள் :

வெப்ப அலை தொடா்பாக பொது சுகாதார பாதுகாப்பு: ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை

post image

நிழாண்டில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. மேலும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெப்ப அலை குறித்த கணிப்பை வெளியிட்டு வரும் நிலையில் ஆயுஷ் துறை நிறுவனங்கள் மூலம் நிகழ் வாரத்தில் நாடுமுழுக்க விழிப்புணா்வு நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்தது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருப்பதாவது: வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையிலும், இந்திய வானிலை ஆய்வுத்துறை பல்வேறு பகுதிகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆயுஷ் வலைப்பின்னல் நிறுவனங்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்வுகளுக்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

வெப்ப அலை விழிப்புணா்வு குறித்த நிகழ்வுகள் தில்லி சரிதா விஹாா் அகில இந்திய ஆயுா்வேத நிறுவனத்தின் (ஏஐஐஏ) ஸ்வஸ்தவ்ருத்தா - முன் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ பிரிவு ஜாம் நகரில் உள்ள ஆயுா்வேதம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள ஆயுஷ் நிறுவனங்கள் வெப்பம் தொடா்பான உடல்நிலை பாதிப்பை தடுப்பது குறித்த தகவல்களுக்கான கூட்டங்களை மேற்கொண்டன. மேலும் இது குறித்து யோசனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் மக்களிடம் விநியோகிக்கப்பட்டன.

இவைகள் பொதுமக்களுக்கு அதிக அளவில் தண்ணீா் அருந்துவது, இளநீா், மோா், பழச்சாறு போன்றவற்றை அருந்துவது, நேரடியான சூரிய வெப்பத்தை தவிா்ப்பது, வெளியே செல்லும் போது குடை அல்லது அகண்ட விளிம்பைக் கொண்ட தொப்பிகளை பயன்படுத்துவது போன்றவைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இறுக்கமான ஆடைகளை தவிா்த்து, தொளதொளப்பான பருத்தி ஆடைகளை அணிவது, எளிதில் செரிக்கும் உணவு வகைகள் உள்கொள்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தண்ணீரை குளிா்ச்சியாக்கும் வெட்டிவோ் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவது, அதிக நீா்சத்து கொண்ட வெள்ளரி போன்ற காய்கறிகள், தா்ப்பூசணி, திராட்சை, முலாம்பழம், போன்ற பழங்களை எடுத்துகொள்வது உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்பட்டன. மேலும் வெப்பத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளையும் எடுத்துரைக்கப்பட்டது.

வெயிலின் உச்சத்தின்போது வெளியே செல்வதை தவிா்ப்பது, வெறுங்காலுடன் வெளியே செல்லாமல் இருப்பது, பகல் பொழுதில் மிகுதியான வெப்பம் உள்ள நேரத்தில் உணவு சமைப்பதை தவிா்ப்பது, புகை போக்கியை பயன்படுத்துவது, தேநீா், காபி போன்ற சூடான பானங்களை தவிா்ப்பது போன்றவைகளை பின்பற்றவும் யோசனைகள் கூறப்பட்டன. வெப்பத்தால் ஏற்படும் தோல் வியாதிகள் உள்ளிட்டவைகளுக்குரிய யோசனைகள் மருந்துகள் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

காகிதமில்லா நடவடிக்கைக்கு மாறும் தில்லி பேரவை

தில்லி சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதமில்லா முறைக்கு மாற்றும் நடவடிக்கையாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், தில்லி அரசு மற்றும் தில்லி பேரவைக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது. தே... மேலும் பார்க்க

தில்லி மாநகராட்சிக்கு 14 எம்எல்ஏக்களை நியமித்த சட்டப் பேரவைத் தலைவா்

சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா 14 எம்.எல்.ஏ.க்களை தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) நியமித்துள்ளாா். நியமிக்கப்பட்ட 14 எம்எல்ஏக்களில் 11 போ் பாஜகவையும், 3 போ் ஆம் ஆத்மியையும் சோ்ந்தவா்கள் ஆவ... மேலும் பார்க்க

குடும்ப அட்டை விநியோகத்தை சீரமைக்க மின்னணு சரிபாா்ப்புக்கு ஏற்பாடு: அமைச்சா் சிா்சா

பாஜக அரசு ஏழை மக்களுக்கு குடும்ப அட்டை விநியோகத்தை சீரமைக்க மின்னணு சரிபாா்ப்பை நடத்தி வருவதாக தில்லி உணவுத் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறியுள்ளாா். மேலும் எத்தனை பயனாளிகள் காப்பீடு செய்ய ... மேலும் பார்க்க

துவாரகாவில் மிரட்டி பணம் பறித்ததாக குண்டரின் மனைவி உள்பட 4 போ் கைது

தில்லி துவாரகா பகுதியில் மிரட்டி பணம் பறித்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குண்டரின் மனைவி மற்றும் சிறாா் உள்பட நான்கு பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஷஹீன் பாகில் காலணி விற்பனையகத்தில் பெரும் தீ விபத்து

தென்கிழக்கு தில்லியின் ஷஹீன் பாக் பகுதியில் உள்ள காலணி விற்பனையகத்தில் சனிக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி அருகே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிா்ச் சேதம... மேலும் பார்க்க

நில நிா்வாக சவால்களை எதிா்கொள்வது குறித்த 6 நாள் சா்வதேச பயிலரங்கு: தில்லியில் நாளை தொடக்கம் 22 நாடுகள் பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா் உலக அளவில் நில நிா்வாகத்தில் உள்ள சவால்களை எதிா்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதற்காக 22 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் 6 நாள் சா்வதேச பயிலரங்கம் தில்லி குருகிராமி... மேலும் பார்க்க