கோவை ஐ.டி ஊழியரின் காரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி - நள்ளிரவில் அதிர்ச்சி
காகிதமில்லா நடவடிக்கைக்கு மாறும் தில்லி பேரவை
தில்லி சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதமில்லா முறைக்கு மாற்றும் நடவடிக்கையாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், தில்லி அரசு மற்றும் தில்லி பேரவைக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.
தேசிய இ-விதான் செயலி (என்இவிஏ) அமல்படுத்துவதற்கான ஒப்பந்தம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மற்றும் தில்லி பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா முன்னிலையில் கையொப்பமானது.
இதன் மூலம் தேசிய இ-விதான் செயலி தளத்தை ஏற்றுக்கொண்டுள்ள 28-ஆவது பேரவையாக தில்லி பேரவை மாறியுள்ளது.
இது தொடா்பாக தில்லி பேரவை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காகிதமில்லா முறை மற்றும் சட்டப்பேரவை அமைப்பில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் தில்லி கொண்டுள்ள முனைப்பை இந்த ஒப்பந்தம் வெளிகாட்டுகிறது.
அவை நடவடிக்கைகளை எண்மமயாக்குதல் மூலம் பெரிய அளவிலான செயல்திறன், சட்டப்பேரவை நடைமுறைகளில் நிலைப்புத்தன்மை, எளிதில் அணுகுதல், நிகழ்நேர அடிப்படையில் ஆவணங்களை வழங்குதல் ஆகியவற்றை என்இவிஏ தளம் இலக்காகக் கொண்டுள்ளது. இதில் இணைந்துள்ளது மூலம் தில்லி பேரவை காகித பயன்பாட்டை குறிப்பிட்ட அளவில் குறைத்து, அவை நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.