செய்திகள் :

Akshay Kumar: ``அந்தப் படம் சரியா போகல, அக்‌ஷய் குமார் சம்பளமும் வாங்கல''- ப்ரித்விராஜ்

post image

̀எல் 2: எம்புரான்' படத்திற்கான புரொமோஷன் பணிகளுக்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குப் பயணித்து வருகிறார் நடிகர் ப்ரித்விராஜ். அந்த நிகழ்வுகளில் பல்வேறு சுவரஸ்யான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் அவர் தயாரித்திருந்த பாலிவுட் திரைப்படமான ̀செல்ஃபி' திரைப்படத்திற்கு நடிகர் அக்‌ஷய் குமார் சம்பளம் பெறவில்லை என்ற பலரும் அறிந்திடாத தகவலை சொல்லியிருக்கிறார்.

Selfiee
Selfiee

2022-ம் ஆண்டு அக்‌ஷய் குமாருக்கு கடினமான காலம் என்றே சொல்லலாம். அவர் நடித்திருந்த படங்களெல்லாம் அப்போது பெரியளவில் பாக்ஸ் ஆபீஸில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டு வெளியான ̀செல்ஃபி' திரைப்படமும் பெரிதளவில் வரவேற்பைப் பெறவில்லை. அக்‌ஷய் குமார் குறித்து பிங்க்வில்லாவுக்கு அளித்த பேட்டியில் ப்ரித்விராஜ், `` அக்‌ஷய் குமார் சார் நடித்திருந்த ̀செல்ஃபி' திரைப்படத்தை நான் தயாரித்திருந்தேன்.

Prithviraj
Prithviraj

அப்படத்திற்காக ஒரு ரூபாயைக் கூட அவர் சம்பளமாகப் பெறவில்லை. இத்திரைப்படம் பணம் ஈட்டினால் நான் என் சம்பளத்தை எடுத்துக்கொள்கிறேன் எனக் கூறினார். படம் சரியாகப் போகவில்லை. அதனால் அவர் சம்பளமும் பெறவில்லை." எனக் கூறியிருக்கிறார்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

``ரூ.90 கோடி கடன், நடந்து சென்றேன்; இப்போது ரூ.3000 கோடிக்கு சொத்து..'' -மனம் திறந்த அமிதாப்பச்சன்

நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார். அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்கவேண்டியிருந்தது. தினம் தினம் கடன் கொடுத்தவர்கள் அவரது வ... மேலும் பார்க்க

Sikandar: "ராஷ்மிகாவின் மகளுடனும் நடிப்பேன்" - சர்ச்சையான சல்மான் கானின் பேச்சு; பின்னணி என்ன?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது.37 ஆண்டுகளாகப் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் ... மேலும் பார்க்க

கொரிய படத்தை ரீமேக் செய்ய சொன்ன சல்மான்கான்; மறுத்த ஏ.ஆர்.முருகதாஸ் - சிகந்தர் படம் உருவானது எப்படி?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடித்து உருவாகி இருக்கும் சிகந்தர் படம் வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தை சல்மான் கானும்... மேலும் பார்க்க

Dhoni: 'அனிமல்' ரன்பீர் கபூராக தோனி... வைரலாகும் சந்தீப் ரெட்டி வாங்காவுடனான தோனியின் விளம்பரம்!

ரிஷப் பண்ட்டின் சகோதரி நிச்சயதார்த்த விழா, ஐ.பி.எல் பயிற்சி, விளம்பரங்கள் என இப்போது எங்கும் தோனிதான் இருக்கிறார். தற்சமயம் ஐ.பி.எல் போட்டிக்கான பயிற்சியில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார் தோனி. இதற்கிடை... மேலும் பார்க்க

இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய வருமான வரி?

மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஒரு நேரத்தில் கடுமையான கடன் தொல்லையால் சிரமப்பட்டார். ஆனால் அதன் பிறகு கடினமாக உழைத்து இன்றைக்கு அதிக அளவில் வருமான வரி செலுத்தும் நபராக உயர்ந்திருக்கிறார். கடந்த... மேலும் பார்க்க

Karan Johar: ``அப்படி விமர்சனம் சொல்வதுதான் எனக்கு பிரச்னை; அது தொந்தரவு செய்கிறது!'' - கரண் ஜோகர்

கரண் ஜோகர் தயாரிப்பில் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியான திரைப்படம் `நதானியான்'. பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகன் இப்ராஹிம் அலி கான் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்தான் இந்த `நதான... மேலும் பார்க்க