வீர தீர சூரன் 3-வது பாடல்!
வீர தீர சூரன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முழுநீள ஆக்ஷன் திரைப்படமான இது ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: அகத்தியா ஓடிடி தேதி!
இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், ’அயில அல்லேலே’ பாடலை வெளியிட்டுள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் விவேக் எழுதிய இப்பாடலை வேல்முருகன் பாடியுள்ளார்.